அண்மையில் உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சீனாவை நம்பும் நேபாளத்திற்கு விரைவில் திபெத் கதியே ஏற்படும் என்று அந்நாட்டிற்கு நல்லெண்ண அடிப்படையில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
உலகின் எல்லா பகுதியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்த வேண்டும் என்று சீனா தீவிரமாக முயன்று வருகிறது. சீனாவின் சூழ்ச்சியினால் எங்கள் நாட்டையே நாங்கள் இழந்து விட்டோடம். எனவே மிகவும் கவனமாக இருங்கள் என்று நேபாளம்-சீனா உறவுகள் குறித்து திபெத்திய நிர்வாகத்தின் தலைவர் லோப்சாங் சங்கே அண்மையில் வேதனையுடன் குறிப்பிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திபெத்திற்கு விடிவு காலம் நெருங்கி கொண்டு இருக்கிறது. அதற்கான சகுனங்கள் தனக்கு தெரிவதாக திபெத் மக்களின் மதகுருவும் தற்பொழுது இந்தியாவில் வாழ்ந்து கொண்டு இருப்பவருமான தலாய் லாமா அண்மையில் கூறியிருந்தார்.
சீனாவின் ஆக்டோபஸ் கரங்கள் தனது அண்டை நாடுகளின் எல்லை பகுதிகளை மெல்ல மெல்ல தன் பக்கம் இழுத்து வருகிறது. சீனாவின் அட்டூழியங்கள் நாளுக்கு நாள் எல்லை மீறி வருவதை உலக நாடுகள் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது.