சமீப காலமாக டுவிட்டரின் நம்பகத்தன்மை பெரும் கேள்விகுறியாகியுள்ளது. அண்மையில் டெல்லியில் நிகழ்ந்த வன்முறை பற்றி இந்தியாவிற்கு எதிரான நிலைபாட்டையே டுவிட்டர் நிறுவனம் எடுத்ததாக கடும் குற்றச்சாட்டு அந்நாளில் கூறப்பட்டது. தவறான கருத்தினை பதிவு செய்யும் நபர்களுக்கு எச்சரிக்கை வழங்காமல். தொடர்ந்து அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் போக்கினை மறைமுகமாக டுவிட்டர் நிறுவனம் செய்து வருகிறது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.
சீனா அல்லது தீவிர இடது ஜனநாயகக் கட்சி முன் வைக்கும் பொய்கள் மற்றும் பிரச்சாரங்கள் குறித்து ட்விட்டர் எதுவும் செய்யவில்லை. அவர்கள் குடியரசுக் கட்சியினர், கன்சர்வேடிவ்கள் மற்றும் அமெரிக்காவின் ஜனாதிபதியை குறி வைத்துள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.
https://twitter.com/realDonaldTrump/status/1266326065833824257