மத்திய அரசு 59 சீன செயலிகளை அண்மையில் தடை செய்தது. இதனால் சீன நிறுவனங்கள் மற்றும் பங்குதாரர்களாக உள்ள கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுக்கு பலத்த அடியாக அது அமைந்திருந்தது. அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பு 1 லட்சம் கோடி ரூபாய் வரை சீனாவிற்கு இழப்பை ஏற்படுத்த வேண்டும் என்று அண்மையில் தீர்மானம் நிறைவேற்றி இருந்ததை யாரும் மறந்திருக்க முடியாது.
59 சீன செயலிகளோடு நெருங்கிய தொடர்பில் இருந்த மேலும் 47 செயலிகளுக்கு அதிரடியாக தடை விதித்துள்ளது இந்தியா. மத்திய, மாநில அரசுகள், தற்பொழுது சீனாவிற்கு எதிராக தொடர்ந்து ஆக்ரோஷமான நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் சீன நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் கிடைக்கக் கூடிய டெண்டர்களை மறு பரிசீலனை செய்ய மத்திய அரசு அதிரடி திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Last month, 59 Chinese apps including TikTok were banned in India
Now, India banned 47 apps, which are clones or variants of Chinese-linked 59 apps
India has also prepared list of over 250 Chinese apps, which shall be examined for violation of “national security & user privacy”
— Anshul Saxena (@AskAnshul) July 27, 2020