இந்திய ராணுவ வீரர்களின் தியாகம், வீரமரணத்தை, அவமதித்த காங்கிரஸ்…!

இந்திய ராணுவ வீரர்களின் தியாகம், வீரமரணத்தை, அவமதித்த காங்கிரஸ்…!

Share it if you like it

கல்வான் பள்ளதாக்கு பகுதியில் ரோந்து பணி மேற்கொள்ளும் ராணுவ வீரர்களுக்கு ஆயுதம் எடுத்து செல்ல ஏன்? அனுமதிக்கவில்லை என்று முந்தைய காங்கிரஸ் அரசு போட்ட ஒப்பந்தத்தையும் மறந்து விட்டு ராணுவ வீரர்களின் வீரமரணத்திலும் அரசியல் செய்திருந்தார் ராகுல் காந்தி.

பிரபல அரசியல் விமர்சகர் ரிஷி பக்ரீ பின்வருமாறு தனது கருத்தினை அண்மையில் டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு வெளியிட்டு இருந்தார்.

ராகுல் காந்தி பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவில் உறுப்பினராக உள்ளார். கடைசி கூட்டம் மார்ச் 12 அன்று நடைபெற்றது. செப்டம்பர் 2019 முதல் பாதுகாப்பு தொடர்பான நிலைக்குழுவின் 11 கூட்டங்களிலும் ராகுல் காந்தி கலந்து கொள்ளவில்லை என்று கூறியுள்ளார்.

நேற்று 21 ஆம் ஆண்டு கார்கில் நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. ஆனால் முந்தைய காங்கிரஸ் அரசோ 2004-2009 முதல் ஜூலை 26 கார்கில் நினைவு தினத்தை கொண்டாவோ, ராணுவ வீரர்களின் தியாகத்தை போற்றவோ இல்லை என்பது தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it