சீனா செய்த மன்னிக்க முடியாத குற்றத்திற்கு. ஒட்டு மொத்த இந்தியர்களின் குரலாக மத்திய அரசு தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே.. 59 சீன செயலிகளின் தடையால் 45,000 கோடி ரூபாய் வரை அந்நாட்டு நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்பட்டது.
சீனாவில் இருந்து ரக்க்ஷா பந்தன் பண்டிகைக்கு ராக்கி கயிறு இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுவது வழக்கம். மத்திய அரசின் தடையால் சீனாவிற்கு மட்டும் நேற்றைய தினம் 4,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
அண்மையில் 47 சீன செயலிகளுக்கு தடை விதித்திருந்தது இந்தியா. Baidu, Weibo ஆகிய செயலிகளுக்கு தற்பொழுது இந்தியா தடை விதித்திருப்பது சீன நிறுவனங்களிடையே கடும் அதிர்வலைகளையும், கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஜின்பிங் நடவடிக்கைகளுக்கு சீன மக்கள், மூத்த சீன கம்யூனிஸ்ட் தலைவர்கள் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் தங்களின் கடும் எதிர்ப்பினை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். எந்நேரமும் ஜின்பிங் அரசிற்கு எதிராக உள்நாட்டு போர் வெடிக்கும் சூழல் உருவாகும் என்று சர்வதேச அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.