தியானன்மென் சதுக்கம் சீன வரலாற்றில் ஒரு கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடமாக கருதப்படுகிறது. அதற்க்கு காரணம் பல சரித்திரம் வாய்ந்த நிகழ்வுகள் நடந்த இடம் அது. மனிதாபமானமற்ற PLA எனப்படும் சீன ராணுவம் நடத்திய ஜூன் 4 படுகொலைகள் என்றும், தியானன்மென் சதுக்க படுகொலைகள் என்றும் அழைக்கப்படும் மனிதநேயமற்ற கொடூரம் நிகழ்ந்த இடமும் அதுவே.
உயிர்களை அச்சுறுத்தும் வகையில் மிக பெரிய ராணுவ குவிப்பும் தியானன்மென் சதுக்கத்தில் குவிந்த போராட்டக்காரர்களை கலைக்க முடியாமல் போகவே, சீன ராணுவம், கண்மூடித்தனமாக போராட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கியை திருப்பி தனது நாடு மக்கள் என்றும் பாராமல், ஆயிரக்கணக்கான பொதுமக்களை சுட்டு தள்ளியது. இதே ஜூன் 4’ஆம் தேதி 1989 அன்று போராட்டத்தை வெற்றிகரமாக முறியடித்ததாக தனது மக்களின் பிணக்குவியல் மீது நின்று கொக்கரித்தது கொலைகார சீன கம்ம்யூனிச அரசு .
போராட்டத்தின் பிள்ளையார் சுழி: இந்த போராட்டத்தின் முதல் வித்து பயிரிட்டது 1970’இல். சீன அரசு அனைத்து தனியார் நிறுவனங்களிலும் அரசின் பங்கீடு மற்றும் முடிவெடுக்கும் திறனை அதிகரித்து புதிய பொருளதார கொளகையை அறிவித்த நாள் தான் இந்த போராட்டத்தின் ஆரம்ப நாள். மாணவர்களின் இந்த போராட்டம், பேச்சு சுதந்திரம், தனி மனித சுதந்திரம், குடியரசு சட்ட அமலாக்குதல், சட்டம் & ஒழுங்கு, பொருளாதாரம் தாராளமயமாக்கல் போன்றவற்றை முன்னின்று நடத்தப்பட்டது. இந்த போராட்டத்திற்கு பலம் சேர்க்கும் விதமாக Fang Lizhi எனும் ஒரு வானியற்பியல் நிபுணர் அமெரிக்காவில் தனது பணியை ராஜினாமா செய்து விட்டு இந்த போராட்டத்தை முன்னின்று எடுத்து சென்றார்.
போராட்டம் வெகு சீக்கிரத்தில் காட்டு தீ போல ஷாங்காய், பீஜிங் போன்ற நகரங்களை பரவி மக்கள் சாரி சாரியாக தியானன்மென் சதுக்கத்தை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தனர். இந்த போராட்டம் பலம் பெறுவது சீன கம்யூனிஸ்ட் அரசாங்கத்தை பெரிதும் கவலை கொள்ள வைத்தது. இந்த பழியை யார் மீதாவது சுமத்த வேண்டுமென்பதற்கு கம்யூனிஸ்டுகள் கட்சி பொது செயலாளர் திரு ஹு யாபோங்க் மீது குற்றம் சுமத்தி 1987’ஆம் ஆண்டு கட்சியை விட்டு நீக்கினார்கள். ஹு யாபோங்க் 1989 ‘ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். ஹு யாபோங்க் சிறு வயதில் மாணவராக பல போராட்டங்களை நடத்தியவர் என்பதால் மாணவர்கள் மத்தியில் அவருக்கு நல்மதிப்பு உண்டு.
ஹு யாபோங்க் அவர்களின் மரணம் மேலும் போராடும் மாணவர்களின் கோப தீயை தாண்டவம் ஆட செய்தது. போராட்டம் மேலும் கொழுந்து விட்டு ஏறிய துவங்கியது. சீன கம்யூனிச அரசை எதிர்த்து போராட்டம் மேலும் வலுப்பெற ஆரம்பித்தது. போராட்ட களம் பலம் பெறுவதையே, போராட்டம் பெரிதாக ஆவதையோ விரும்பாத கம்யூனிச அரசு, கொடுங்கோலன் டெங்க் ஜியோபிங் தலைமையில், இந்த மாணவர் போராட்டம் கம்யூனிசத்தை அழிக்க உலகநாடுகள் அமெரிக்க தலைமையில் நடப்பதாக கூறி அனைத்து மாணவர்களையும் தேச துரோக வழக்கில் கைது செய்ய போவதாக கொக்கரித்தார். பத்து லட்சத்திற்கும் மேலான போராட்டக்காரர்களை நோக்கியும், ஆயுதம் எதுவும் ஏந்தாத அப்பாவி மாணவர்களை நோக்கியும், துப்பாக்கியை திருப்ப சொன்ன டெங்க் ஜியோபிங் கனமொடி தனமாக சுட உத்தரவு பிறப்பித்தார்.
தியானன்மென் சதுக்கத்தை நோக்கி வந்த ராணுவ டாங்கிகளை கையில் வெள்ளை கொடியுடன் மரித்த ஒரே ஒரு போராட்டக்காரனின் படம் மிக வைரல் ஆகி உலகெங்கும் பரவியது. அந்த போராட்டக்காரர் என்ன ஆனார் என்பதை இது வரை உறுதி செய்ய முடியவில்லை. அவரை அங்கேயே சுட்டு கொன்றதாக ஒரு செய்தியும், 14 நாட்கள் சிறையில் கொடுமைப்படுத்தி கொன்றதாகவும் ஒரு செய்தி.
தற்போதைய நிலவரம் : இன்றும் சீனா உலக நாடுகளின் விஷயத்தில் மூக்கை நுழைத்து தனது ஆதிக்கத்தை செலுத்த முயற்சிக்கிறது, அனால் தனது நாட்டில் ஒரே ஒரு எதிர்ப்பு குரலை கூட சகித்து கொள்ளாமல் நசுக்கி விடும், போராட்டம் என பேச கூட முடியாது. அடுத்த நொடி கைது தான். எதிர்க்கட்சி, எதிர் கருத்து என ஒன்றும் சீன கம்யூனிச அரசின் அகராதியிலேயே இல்லை. இந்த சீன கம்யூனிச அரசு எவ்வளவு கொடூரம் படைத்த அரசு என்றால், முப்பது ஆண்டுகள் முன்பு கைது செய்யப்பட்ட பல மாணவர்கள் இன்றும் சீன சிறைகளில் இருக்கிறார்கள். அதிகாரப்பூர்வமற்ற செய்திகளின் படி தியானன்மென் சதுக்க படுகொலைகளில் இறந்தவர்களின் எண்னிக்கை பத்தாயிரத்தை தாண்டும்.
இன்றும் சீன கம்யூனிச அரசு, இந்த தியானன்மென் சதுக்கத்தில் நடந்த போராட்டத்தை மனதில் வைத்து எதிர் கேள்வி கேட்கும் எந்த பொது மக்களையும் கைது செய்து சிறையில் கொடுமை படுத்தும் பழக்கத்தை கையாள்கிறது. 31 ஆண்டுகள் கடந்த பிறகும் தியானன்மென் சதுக்க படுகொலை நினைவு நாளை கூட கொண்டாட விடாது இந்த கொலைகார சீன கம்யூனிச அரசு.
உலக மக்களுக்கு கம்யூனிச அரசு என்றாலே கொலைகார கொடுங்கோல் அரசு என நினைவு படுத்துவது இந்த தியானன்மென் சதுக்க படுகொலைகள் தினம் தான். சரியான பாசிச அரசு என்று ஒன்று உண்டென்றால் அது இந்த சீன கம்யூனிச அரசு தான். 31 ஆண்டுகளுக்கு முன் அமைதியான ஒரு போராட்டத்தை பிணக்குவியலாக மாற்றிய பெருமை, தனது நாடு மக்களை கண்மூடி தனமாக சுட்டு கொன்ற பெருமை இவை அனைத்துமே, கொடுங்கோல் ஆட்சி நடத்தும் சீன கம்யூனிச அரசையே சாரும்.