சீனாவில் பரவிய நோயை பற்றி, உலக சுகாதார அமைப்பு, முன்னெச்சரிக்கை கொடுத்திருந்தால். இன்று உலகமே ரத்த கண்ணீர், வடிக்கும் அவலநிலை எழுந்திருக்காது. இது உலக சுகாதாரா அமைப்பின், தோல்வியை காட்டுகிறது. அமெரிக்காவை தொடர்ந்து, ஐப்பான் சீனா மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கண்டனம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா, தனது அகோர பசிக்கு 53,000, அப்பாவி உயிர்களை பலி வாங்கியுள்ளது. இதுவரை இந்தியாவில் 56 நபர்கள், தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். பல லட்சம் மக்கள் இக்கொடிய, தொற்று நோயில் பாதிக்கப்பட்டுள்ளனர். 205 நாடுகளில் தனது எல்லையை பரப்பி, கொடூர ஆட்டம் போராடுகிறது கொரோனா கிருமி.
சீனாவில் பரவிய, நோயினால் பாதிப்பு இல்லை என்று, உலக சுகாதார அமைப்பு பலமாக முட்டு கொடுத்தது. அதனை நம்பிய பல நாடுகள், இன்று இரத்த கண்ணீர் வடிக்கும் அவலநிலை. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இதனை சீன வைரஸ் என்றும், பரப்பியது சீனா தான் என்று கூறியதற்கு. இந்தியாவில் உள்ள தோழர்கள் அனைவரும் ஒப்பாரி வைத்து, டிரம்பிற்கு எதிராக டுவிட்டரில் கும்மி அடித்து மன சாந்தி அடைந்தார்கள்.
அண்மையில் ஐப்பான் பாராளுமன்றத்தில், உரையாற்றிய துணை பிரதமர், அசோ டாரோ உலக சுகாதார அமைப்பை, மிக கடுமையாக, விமர்சனம் செய்துள்ளார். உலக சுகாதார அமைப்பின், இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம்மை அப்பதவியில், இருந்து தூக்கி எறிய வேண்டும் என ஆவேசத்துடன் கூறியுள்ளார்.
இதுவரை 63 நபர்களை நம் நாடு இழந்துள்ளது. உலக சுகாதார அமைப்பு(WHO) என்பதற்கு பதில், சீனா சுகாதார(CHO)அமைப்பு என்று பெயர் மாற்ற வேண்டும். என அந்நாட்டின் மீது கடுமையான, குற்றச்சாட்டுக்களை முன் வைத்து, பாராளுமன்றத்தில் டாரோ கொதித்துள்ளார், என்பது குறிப்பிடத்தக்கது.