நமது இந்திய வீரர்களின் வீரமரணத்திற்கு காரணமான சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று நாடு முழுவதும் மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். அண்மையில் டெல்லி கரோல் பாக் நகரில் அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (சிஐஐடி) உறுப்பினர்கள் சீனப் பொருட்களை வீதியில் போட்டு எரித்தனர்.
வரும் “டிசம்பர் 2021 க்குள் ரூ .1 லட்சம் கோடி மதிப்புள்ள சீனப் பொருட்களை அந்நாட்டில் இருந்து இறக்குமதி செய்வதை குறைக்க முடிவு செய்துள்ளோம்” என்று (சிஐஐடி) பொதுச் செயலாளர் பிரவீன் கண்டேல் வால் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் தொடர்ச்சியாக இனி இன்டர்நெட்டில் விற்பனையாகும் எந்த பொருளாக இருந்தாலும்..அதில் எந்த நாட்டினுடைய தயாரிப்பு, அரசாங்கத்திடம் பதிவு செய்யப்பட்ட விவரம் போன்ற முழு புள்ளி விவரங்கள் குறிப்பிட வேண்டும். இதற்கு முன் இறக்குமதி செய்யப்படுகின்ற கம்பெனி பெயர் மட்டும் தான் இருக்கும். இதன் மூலம் சீன பொருட்களை இந்தியர்கள் எளிதில் அடையாளம் கண்டு ஒதுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இது சீனாவிற்கு இந்தியா கொடுத்த மற்றொரு சம்மட்டி அடி என்று அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர்.
GOI makes it compulsory to mention country of origin on all products listed under GeM portal , an e-market place . Periodic updating is also made compulsory . A firm step towards #MakeInIndia . pic.twitter.com/sb9mESs46h
— B L Santhosh (@blsanthosh) June 23, 2020