நம் ஒற்றுமையை காட்ட….! சீன பொருட்களை புறக்கணியுங்கள்…! பிரபல நடிகை வேண்டுகோள்..!

நம் ஒற்றுமையை காட்ட….! சீன பொருட்களை புறக்கணியுங்கள்…! பிரபல நடிகை வேண்டுகோள்..!

Share it if you like it

இந்தியர்கள் நினைத்தால் முடியாதது இல்லை… சீன பொருட்களை புறக்கணிப்போம்…! இந்திய பொருட்களுக்கு ஆதரவளிப்போம்…!
சீனாவின் பேடித்தனமான தாக்குதலுக்கு நமது இந்திய ராணுவ வீரர்கள் 20 பேரை நம் பாரத பூமி இழந்ததுள்ளது. சீன அரசு (global times) பத்திரிக்கை என்று  நம்பப்படும்  அப்பத்திரிக்கை. இந்தியாவின் வீரத்தை பற்றியும், இந்தியர்களின் ஒற்றுமை பற்றியும் தொடர்ந்து அபாண்டமான கருத்துக்களை எழுதி வருகிறது.

இந்தியாவின் மீது சைபர் தாக்குதலை அண்மையில் சீனா நிகழ்த்தியது. சீன பொருட்களை புறக்கணித்து ஒவ்வொரு இந்தியனும் அந்நாட்டின் மீது மரண அடி கொடுக்க நாம் தயராக வேண்டும் என்பதே இந்திய உணர்வு உள்ளவர்களின்  கடமையாக இருக்க வேண்டும்.

பிரபல கிரிக்கெட் வீரர் அர்பஜன் சிங், பிரபல மாடல் மிலிந்த் சோமன், சீன பொருட்களை புறக்கணியுங்கள் என்று அண்மையில் கூறியிருந்தனர். 1 லட்சம் கோடி ரூபாய் சீனாவிற்கு இழப்பை ஏற்படுத்த அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இந்நிலையில் பிரபல திரைப்பட நடிகை சனம் ஷெட்டி.  டிக் டாக், பப்ஜீ, செயலிகளையும், சீன பொருட்களையும் நாம் புறக்கணிக்க வேண்டும். இந்திய நிறுவனங்களுக்கு நாம் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


Share it if you like it