பச்சைத்தமிழர் என்றும், கருப்பு காந்தி என்றும், மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட காமராஐரால் பிரதமர் பதவிக்கு, முன்மொழியப்பட்டவர் லால் பகதூர் சாஸ்திரி ஆவார். சுதந்திர இந்தியாவின் இரண்டாவது பிரதமராகவும், அப்பழுக்கற்ற நேர்மையான தலைவரகாக திகழ்ந்தவர் லால் பகதூர் சாஸ்திரி, என்று கூறினால் அதுமிகையன்று. சிறிது காலமே பிரதமர் பதவியில் இருந்தாலும் மக்களின் நலன் சார்ந்த பல திட்டங்களை செயல்படுத்தி காட்டியவர்.
1965ம் ஆண்டு இந்தியாவின் காஷ்மீர் பகுதியை, பாகிஸ்தான் ஆக்கிரமித்ததை எதிர்த்து பல முறை, அந்நாட்டிற்கு எச்சரிக்கை விடுத்தார். இறுதியில் போரில் ஈடுப்பட்டு ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்து அந்நாட்டை விரட்டி அடித்தார். அப்போரின் பொழுது உணவுத் தட்டுப்பாட்டைப் போக்க, இவர் எழுப்பிய ‘ஜெய் ஜவான் ஜெய் கிசான்’ என்கின்ற முழக்கம், பெரும் எழுச்சிப் பெற்று இருந்தது. பிரதமராக பொறுப்பேற்ற பின் இந்தியாவின் விவசாயப் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பல திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.
இயன்றவர்கள், வார நாட்களில் ஒரு வேளை உணவை ஒதுக்கி, உண்ணாவிரதம் இருந்தால் நாட்டில் பல கோடி, ஏழைகள் சாப்பிட முடியும் என்று முழங்கினார். இதற்கு எதிர்க்கட்சிகள் அவரின் தூய்மையான, எண்ணத்தை புரிந்துக்கொள்ளாமல் கடுமையாக விமர்சித்தனர்.
காஞ்சி மகா பெரியவர், காமராஐர், போன்றவர்கள் ஏழைகள் யாரும், பட்டினியால் உறங்க கூடாது., என்று ஒருபிடி கை அரிசி திட்டம் கொண்டுவந்து, மக்களிடம் ஒரு சமூக, விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினர். அதன் பிறகு பாரத பிரதமர் மோடி கொரோனா தொற்றில், இருந்து மக்கள் தங்களை தற்காத்து, கொள்ள சுய ஊரடங்கு மேற்கொள்ளுமாறு நேற்று நாட்டு, மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். மோடி மக்கள் மீது கொண்ட அக்கறையை, துளியும் எண்ணிப் பார்க்காமல், சிலர் ஒரே ஒரு நாள் வெளியே வராமல், இருந்தால் எல்லாம் சரியாகி, விடுமா என்று கேலி பேசி வருகின்றனர்.
- வருடத்திற்கு ஒரே ஒரு நாள் தான் உணவு தினமாக கொண்டாடப்படுகிறது. அன்று மட்டும் நாம் உணவு உண்கிறோமா?
- உலக தூய்மை தினம் ஒன்று கடைபிடிக்கப்படுகிறது, அன்றைக்கு மட்டும் தான் நாம் குளிக்கிறோமா, பல்லு விளக்குகிறோமா?
- அன்னையர் தினம், தந்தையர் தினம், முதியோர் தினம் எல்லாம் கொண்டாப்படுகிறது. மற்ற நாட்களில் எல்லாம் நாம் நம் உறவுகளை அரசு காப்பகத்திற்கு சென்று தான் பார்ப்போமா?