திமுகவின் கறுப்பர் கூட்டம், ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும். விதமாக முருகனையும், கந்த சஷ்டி கவசத்தையும், இழிவுப்படுத்தி பேசியது இன்று வரை மக்களின் மனங்களில் மாறா வடுவாக இருந்து வருகிறது. உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்களிடையே எழுந்த கடும் எதிர்ப்பினை அடுத்து தமிழக அரசு அதிரடியாக சில நபர்களை கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைத்துள்ளது.
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் திரு. ஹெச். ராஜா ஹிந்துகளுக்கு தனது கருத்தினை பின்வருமாறு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
வரும் ஆகஸ்ட் 9 மாலை 6 மணிக்கு ஹிந்துக்கள் அனைவரும் தங்கள் வீட்டு வாசலில் வேல் வைத்து பூஜை செய்து கந்த சஷ்டி கவசம் பாடி சூரனை சம்ஹாரம் செய்தது போல தமிழகத்தில் உள்ள ஹிந்து விரோத சக்திகளை அழித்திட முருகப்பெருமானை வேண்டுவோம்.#வெற்றிவேல்_வீரவேல் pic.twitter.com/Q6TQGCrA9e
— H Raja (@HRajaBJP) July 29, 2020