ஊரடங்கு உத்தரவிற்கு பிறகு தங்களால் இயன்ற உதவிகளை இரக்க குணம் கொண்ட நபர்கள் இன்று வரை வழங்கி வருகின்றனர். ஏழைகள் இருக்கும் இடத்திற்கே சென்று கிருமி நாசினி திரவம், கையுறை, உணவுகள் ஆர்.எஸ்.எஸ் வழங்கி வருகிறது.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியில் சேவா பாரதி அமைப்பு அப்பகுதியில் உள்ள அங்களாம்மன் கோவில் மண்டபத்தில் உரிய அனுமதி பெற்று உணவுகளை சமைத்து கடந்த 1 தேதியில் இருந்து. சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு வழங்கி வருகிறது
இதற்கு திமுக பெருமாநல்லூர் ஊராட்சி துனண தலைவர் வேலுச்சாமி. தினமும் 130 சாப்பாடு கொடுங்கள் என்று அந்த அமைப்பிற்கு நெருக்கடி கொடுக்கவே. இதற்கு சேவா பாரதி எதிர்ப்பு தெரிவித்தனர். இன்று கோவில் நிர்வாகம் உணவு சமைக்க தடை விதித்துள்ளது. இதற்கு பா.ஜ.க மூத்த தலைவர் எச். ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் எதிர்ப்பினை தெரிவித்துளார்.
உழைப்பவர்களிடம் இருந்து பிடிங்கி தங்களை விளம்பரம் தேடும் திமுகவிற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அதே போன்று தூத்துகுடியில் தி.மு.க எம்.எல்.ஏ பகுதிக்கு உட்பட்ட இடத்தில். கம்பெனி முத்திரையுடன் அரிசி பைகளை சிலர் ஏழைகளுக்கு வழங்கி இருந்தனர். அதனை பிரித்து பார்த்த பொழுது, உள்ளே ரேஷன் அரிசி இருப்பதை கண்டு, மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இக்காணொலி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.