சேவா பாரதி வழக்கு – கறுப்பர் கூட்டத்தின் மீதான மானநஷ்ட வழக்கை ஏற்று கொண்ட நீதிமன்றம்..!

சேவா பாரதி வழக்கு – கறுப்பர் கூட்டத்தின் மீதான மானநஷ்ட வழக்கை ஏற்று கொண்ட நீதிமன்றம்..!

Share it if you like it

‘கறுப்பர் கூட்டம் என்ற யூ-டியூப் சேனல் அண்மையில்  இந்து கடவுள்களையும், ஹிந்துக்களின் உணர்வுகளையும் புண்படுத்தும் வகையில் பேசும் விதமாக பல காணொளிகளை வெளியிட்டு இருந்தது..

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாஜக வழக்கறிஞர் பிரிவின் சார்பில், கடந்த ஜூலை 13, 2020 அன்று, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.. இதன் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், ‘கறுப்பர் கூட்டம்’ யூ-டியூப் சேனல் மீது வழக்குப் பதிவு செய்தனர் என்பதை யாரும் மறந்திருக்க முடியாது..

“கறுப்பர் தேசம்” என்ற பெயரில், “சாத்தான் குளம் இரட்டை கொலை” சம்பவம்,  “சேவாபாரதி அமைப்பால் நிகழ்த்தப்பட்ட படுகொலை” என்று அவதூறான செய்திகள் அடங்கிய ஒளி நாடாவை “சுரேந்தர் என்கிற  நாத்திகன்” யூ-டியூப் சேனல் (You Tube) இல் வெளியிட்டு இருந்தது..

இந்த நிகழ்வு, “சேவா பாரதியின்”நற்பெயருக்கு களங்கம் விளைவித்தது. அதனால், ஒரு கோடி ரூபாய், நஷ்ட ஈடு தரகோரி, சென்னை உயர் நீதி மன்றத்தில் சேவாபாரதி சார்பாக அதன் தலைவர் திரு ரபு மனோகர் தொடுத்த வழக்கு பதிவு செய்து இருந்தார் இதனை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்று கொண்டு உள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it