சீனாவின் திட்டமிட்ட கொடூர தாக்குதலுக்கு 20 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்திய மக்கள் ராணுவ வீரர்களின் இழப்பில் பெரும் துக்கத்தில் இன்று வரை இருந்து வருகின்றனர். இச்சமயத்தில் ராகுல் காந்தி இந்திய ராணுவம் ஏன்? ஆயுதங்கள் இல்லாமல் அப்பகுதிக்கு சென்றது. என்று கேள்வி எழுப்பி இருந்தார்,
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் அமித் மால்வியா தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
”1993 இந்தியா-சீனா ஒப்பந்தம் பற்றி ராகுல் காந்திக்கு தெரியாது …இரு நாடுகளின் படைகள் எல்லையில் ரோந்து செல்லும் போது ஆயுதங்களைப் பயன்படுத்தாது என்று அப்போதைய இந்தியப் பிரதமர் நரசிம்மராவ் சமாதான ஒப்பந்தத்தின் கீழ் முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
new official flag of congress pic.twitter.com/roNL54uFgt
— ALLU🐍 (@ind_Cyborg) June 17, 2020
நாட்டை பற்றி எந்த வித புரிதலும் இல்லாமல் மீண்டும் மீண்டும் தான் சிறுபிள்ளை என்பதை தொடர்ந்து ராகுல் நாட்டு மக்களுக்கு உணர்த்தி வருவதாக நெட்டிசன்கள் முதல் அரசியல் நோக்கர்கள் வரை கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.