கொரோனா தனது பூர்விகமான சீனாவில் இருந்து, இன்று உலகயையே தனது கட்டுப்பாட்டுக்கு கீழ், கொண்டு வந்துள்ளது இந்நோய் கிருமி. இதுவரை 27,417 நபர்களின் உயிரை, விலையாக மனித குலம் வழங்கியுள்ளது. 6 லட்சத்து 700 நபர்களிடம், தனது கோர முகத்தை, காட்டியுள்ளது.
இந்தியாவில் 873 நபருக்கு மேல், தீவிர சிகிச்சை பிரிவில், அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 20 நபர்கள் இறந்துள்ளனர். அண்மையில் பாரத பிரதமர் மோடி, நாடு முழுவதும் ஊரடங்கு, உத்தரவு பிறப்பித்தார். மக்களின் அடிப்படை தேவைகள் பெறுவதில், சிரமம் இல்லை என்பது, நிதர்சனமான உண்மை. ஆனால் ஆறு மணிக்கு மேல் ஆட்டோ ஓடாது என்னும், அன்பர்களின் வாழ்வில், புயல் வீசியது. சோம பானம் அருந்தும் பிரியர்களின், உலகமே இடிந்து தரை மட்டமானது, என்று கூறும் நிலையே உள்ளது.
நேற்று கேரளாவில் குன்னம் குளம், அருகே தவனூரில் 38 வயது உடைய, சனோஜ் என்னும் இளைஞர், மது கிடைக்கவில்லை என்கிற, ஒரே காரணத்திற்காக இனி நாம் வாழ்ந்தது போதும். என அவரது வீட்டில் தூக்கிட்டு, தன்னை மாய்த்துக்கொண்டது. அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவரின் உறவினர்கள் மது கிடைக்காததைத் கண்டித்து, இரண்டு நாட்களாக துயரத்தில், இருந்ததாக கூறியுள்ளனர்.
இந்தியாவிலயே கேரள அரசு மட்டும் தான், கொரோன எதிரொலியை பொருட்படுத்தாமல், பெவ்கோ நிலையங்கள் மூலமாக குடிமகன்களை, குஷிப்படுத்தி கல்லா கட்டியது. மதுக்கடைகளை மூட வேண்டும் என்று, பல சமூக ஆர்வலர்களின் குரலுக்கு காதில் பஞ்சு அடைத்தது, போல் இருந்தது கேரள அரசு. அதன் பின்னர் பிரதமர் உத்தரவை அடுத்து, தனது பிடிவாதத்தை தளர்த்தி, கொண்டு மதுபானக் கடைகளையும், பார்களையும், மூடியது பினராய் அரசு.
கேரளாவில் மேலும் 39 நபர்களுக்கு, நேற்று COVID-19 உறுதி செய்யப்பட்டுள்ளது, என்பது அண்மை செய்தி. மதுவை ஒழிப்போம்! மதியை வளர்ப்போம்! என்ற எண்ணம் மக்களிடம் மேலாங்கினால், மட்டுமே சமூகத்தில் மாற்றத்தை, உண்டாக்க முடியும் என்பது திண்ணம்.
(பி.கு) தமிழகத்தில் குடிப்போருக்கு சங்கம் உள்ளது.