Share it if you like it
கொரோனா எதிரொலி காரணமாக ஊடகங்கள், பத்திரிகைகள், சமூக ஊடகங்கள், உள்ளிட்டவை பொறுப்புணர்வோடு, மக்களுக்கு செய்திகளை வழங்க வேண்டும். மக்களிடம் குழப்பத்தையோ, அச்சத்தையோ உருவாக்கும், வகையில் சரிபார்க்கப்படாத செய்திகளை, வெளியிட வேண்டாம் என்றும், ஊடக தர்மத்தை பின்பற்றி நடக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில் நாராயணன் திருப்பதி பா.ஐ.க செய்தித் தொடர்பாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பட்டருக்கு என்று பொய் செய்தியை வெளியிட்ட ஊடகங்கள், சென்னையில் ஞாயிற்றுக்கிழமை கிருஸ்துவ ஜெப கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது என்ற உண்மை செய்தியை வெளியிடாதது ஏன்? இது தானே மதவாதம்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Share it if you like it