டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது இது தற்காலிகமாக இருந்துவிடக் கூடாது- டாக்டர் கிருஷ்ணசாமி!

டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது இது தற்காலிகமாக இருந்துவிடக் கூடாது- டாக்டர் கிருஷ்ணசாமி!

Share it if you like it

ஊரடங்கு உத்தரவின் மூலம் மக்களுக்கு சில சிரமங்கள் இருந்தாலும். கடந்த ஒரு மாதமாக எங்கள் குடும்பம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சண்டை, சச்சரவு இல்லாமல் கூழோ, கஞ்சியோ, குடித்து நிம்மதியாக இருக்கிறோம்.

தாலிக்கு தங்கம் தர வேண்டாம் இந்த இரண்டு அரசும். எங்கள் தாலி தங்கினாலே போதும் அதற்கு நடவடிக்கை எடுங்கள் என்று கூறும் பொழுதே தெரிந்து கொள்ளலாம் அவர்களின் வலி மிகுந்த வார்த்தைகளை.

அண்மையில் மதுபான கடைகளை உடனே மூட வேண்டும் என்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கரகாட்டம் ஆடியது மக்களுக்கு துளியும் பிடிக்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. முழக்கம் எதுக்கு. திமுக தலைவர்கள் நடத்தும் மதுபான ஆலைகளை மூடச் சொல்ல வேண்டியதுதானே. மக்களை ஏமாற்றும் திமுக என்று ஹச். ராஜா காட்டமாக கூறியிருந்தார்.

இந்நிலையில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.

டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டிருப்பதை வரவேற்கிறேன். டாஸ்மாக் கடைகளில் நடைபெற்ற அத்துமீறல்களை கண்ணுற்ற நீதிமன்றம், இனி அனுமதித்தால் விளைவுகள் விபரீதமாகும் என்று உணர்ந்து டாஸ்மாக் கடைக்கு தடை விதித்திருக்கிறது.
இது தற்காலிகமாக இருந்துவிடக் கூடாது


Share it if you like it