காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த தலைவர்கள் டெல்லியில் நிகழ்ந்த வன்முறைக்கு காரணம் ஆர்.எஸ்.எஸ் நபர்கள் தான் என்று வழக்கம் போல் பொய் கருத்தினை தங்களது அதிகாரபூர்வமான டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு மக்களின் மனதில் தேவையற்ற பயத்தையும், நாட்டில் அமைதி நிலவ கூடாது என்கின்ற தங்களின் குறுகிய எண்ணத்தையும் பரப்பி வருகின்றனர் என்பதை நன்கு உணர முடிகிறது.
டெல்லி காவலரை ஒருவன் துப்பாக்கி காட்டி மிரட்டியது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அந்த நபரை கண்டுபிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவன் பெயர் முகமது ஷாருக் என்று தெரியவந்துள்ளது. உண்மை இவ்வாறு இருக்க எதிர்க்கட்சிகள் தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக உள்நோக்கத்துடன் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதும்
உலகம் முழுவதும் நன்கு அறிந்த டுவிட்டர் நிறுவனம் தவறான கருத்தினை பதிவு செய்யும் நபர்களுக்கு எச்சரிக்கை மற்றும் கண்டனத்தை தெரிவிக்காமல் இருப்பதை பார்க்கும் பொழுது இது நேர்மையான சமூக வலைத்தளமா என்று மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
This verified handle @ihansraj is spreading fake news regarding identity of the violent rioteer who pointed gun towards the security personnel.
Kindly take action @HMOIndia @DelhiPolice @LtGovDelhi @TwitterIndia @verified @ANI @Republic_Bharat @OpIndia_in pic.twitter.com/1ygEkQ8pJ2— Soham (@All0None5510) February 25, 2020