இந்தியாவின் வளர்ச்சி பிடிக்காத பிரிவினைவாத அரசியல்வாதி, ஊடகங்கள் முதல் அயல்நாடு வரை டெல்லி கலவரம் பற்றி உண்மைக்கு புறம்பான பொய் செய்தியினை பரப்பி தங்களின் அரிப்பை தீர்த்துக்கொள்கின்றன.
இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ஒரு பத்திரிக்கை நிறுவனம். இந்தியாவை சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளர் ஜே.கோபி கிருஷ்ணனை தொடர்பு கொண்டு டெல்லி கலவரத்தில் மதரீதியில் இறந்தவர்களை பற்றியும் டோனால்ட் ட்ரம்பை இனணத்தும் 1000 வார்த்தைக்கு குறையாமல் கட்டுரை எழுதி அனுப்பினால் அமெரிக்க டாலர் (1,500) இந்திய மதிப்பில் ரூ 1,08,795 சன்மானமாக வழங்கப்படும் என்று கூறியிருந்தது.
Why i am angry? A US Newspaper today asked me write on Delhi Riots asking how many died on Religion basis in connection with Trump's visit. Rate was $1500 for 1000 words….My Reply was : Your President Trump rightly call you as Presstitutes @#$%^&* @#$%^ 😡😡 https://t.co/DIdQBusN5a
— J Gopikrishnan (@jgopikrishnan70) February 29, 2020
ஆனால் அவரோ அந்நிறுவனத்தை எல்லாவற்றையும் தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கும் ’அயோகியர்களே’என்று மிக கடுமையாக விமர்சித்தும். சில நூறு டாலர்களுக்கு ஆசைப்பட்டு தங்கள் ஆத்மாவை விற்கும் இந்திய ஊடகத்தினரின் முகத்திரையை கிழித்ததுடன், டெல்லி கலவரத்தில் இறந்த மக்கள் மீது மத அடிப்படையில் எழுதுவதற்கு பெரும் தொகையை, சில பத்திரிக்கையாளர்கள் வாங்கி இருப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.