Share it if you like it
- டெல்லி வசந்த் குஞ்ச் குடியிருப்பாளர் ஒருவர் ஏப்ரல் 28 அன்று, டெல்லி சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் ஜாபருல்-இஸ்லாம் கான் ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில் ஒரு சமூக ஊடக இடுகையை வெளியிட்டார் என்றும், அந்த இடுகையின் உள்ளடக்கங்கள் “ஆத்திரமூட்டும் வகையிலும், மக்களிடையே பிரிவினையை தூண்டும் வகையிலும் உள்ளதாக காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
- இதனையடுத்து நேற்று டெல்லி சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் ஜாபருல் இஸ்லாம் கான் மீது தில்லி காவல்துறையினர் தேசத்துரோக குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்தனர். அவர் தனது சமூக ஊடக இடுகைகளில் “ஆத்திரமூட்டும்” கருத்துக்களை கூறியதற்காக ஐபிசி பிரிவு 124 ஏ (தேசத்துரோகம்) மற்றும் ஐபிசி பிரிவு 153 ஏ மதத்தின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை வளர்ப்பது ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Share it if you like it