தங்கமான முதல்வர் பினராயிடம் இருந்து அனைவரும் பாடம் கற்று கொண்டு ஆட்சி நடத்த வேண்டும் என்று தமிழக தோழர்கள் இந்தியாவிற்கே வகுப்பு எடுப்பார்கள். ஆனால் கேரளாவில் 30 கிலோ தங்கம் கடத்தல் தொடர்பாக முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண்ணுக்கு தொடர்பு உள்ளது என்கின்ற குற்றச்சாட்டிற்கு பதில் அளிக்காமல் பெட்டி பாம்பாக அடங்கி கிடப்பது ஒருபுறம் தமிழக மக்களிடையே கடும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருந்தாலும்.
மற்றொருபுறம் இவ்விவகாரம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜஎஸ் தீவிரவாதிகளுக்கு நிதி உதவிகள் செய்யவே, தங்க கடத்தல் நிகழ்ந்து இருக்க வாய்ப்பு இருக்கலாம் என்று உளவுத்துறை கூறியிருந்தது. இதனை மேற்கோள் காட்டி தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஜஏ) நீதிமன்றத்தில் முறையிட்டது. எனவே தலைமறைவு குற்றவாளியாக உள்ள ஸ்வப்னா சுரேஷிடம் தீவிரமாக விசாரிக்கவும், அவருக்கு முன்ஜாமீன் வழங்க கூடாது என்று (என்ஜஏ) கூறியிருப்பது கேரள முதல்வர் மத்தியிலும் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.