Share it if you like it
- மேற்கு வங்காளத்தின் ஹூக்லி மாவட்டத்தில் உள்ள தெலினிபாராவில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் ஊரடங்கு உத்தரவுகளை பின்பற்ற மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அஜ்மீரில் இருந்து திரும்பிய பல இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், அவர்கள் ஊரடங்கு உத்தரவுகளைப் பின்பற்றாமல் சுற்றி வந்தனர். அப்பகுதியின் ஹிந்துக்கள் இதனால் அச்சமடைந்து வெளியாட்கள் தங்கள் பகுதிகளில் நுழைவதைத் தடுக்க தடுப்புகளை அமைத்தனர். இருப்பினும், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தடுப்புகளை உடைத்து ஹிந்து பெரும்பான்மை பகுதிக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. இதற்கு ஹிந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், இஸ்லாமிய அடிப்படைவாத கும்பல் ஹிந்துக்களை கடுமையாக தாக்கியுள்ளதாக பாஜக எம்பி லாக்கட் சட்டர்ஜி கூறினார்.
I tried to call CP of Chandannagar police Dr. Humayun Kabir many times, but he didn’t answer my call. State administration is mute spectator and Telenipara is burning. #SaveBengal pic.twitter.com/rZo9ahTove
— Locket Chatterjee (@me_locket) May 12, 2020
- இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பயன்படுத்தும் பொது கழிப்பறைகளை ஹிந்துக்கள் பயன்படுத்த மறுத்துள்ளனர். இதனால் ஹிந்துக்கள் மீது கோபத்தை ஏற்படுத்தி கலவரத்திற்கு வழிவகுத்ததாக கூறப்படுகிறது.
- இதனால் ஆத்திரமடைந்த இஸ்லாமிய அடிப்படைவாத கும்பல் ஹிந்து வீடுகளுக்கு தீ வைத்ததாகவும், குண்டுகள் முஸ்லீம் கும்பலால் வீசப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஹூக்லி எம்.பி. லாக்கெட் சாட்டர்ஜி தாக்குதல்கள் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாகவும், காவல்துறை இந்த தாக்குதல்களை தடுக்காமலும், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமலும் வேடிக்கை பார்த்து நின்றதாக குற்றம் சாட்டியுள்ளார். ஆம்புலன்ஸில் ஆபத்தான ஆயுதங்கள் கொண்டு செல்லப்பட்டதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் தாக்கப்பட்டதாகவும் சாட்டர்ஜி மேலும் குற்றம் சாட்டினார்.
Telenipara is burning and police is missing like Mamata Banerjee. #SaveBengal pic.twitter.com/SeRpWTYb09
— Locket Chatterjee (@me_locket) May 12, 2020
- வங்காளம் எரிந்த நிலையில், மேற்கு வங்க அரசாங்கத்தின் உள்துறை திணைக்களம் தெலினிபாரா அமைதியைக் குலைக்க’ முயற்சிப்பவர்கள் மீது ‘கடுமையான நடவடிக்கை’ எடுப்பதாக எச்சரித்தது. மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 56 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் மற்றும் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை காவல்துறை தேடிவருகிறது. சட்டம் ஒழுங்கை பராமரிக்க அப்பகுதியில் சிஆர்பிசியின் பிரிவு 144 விதிக்கப்பட்டுள்ளது மற்றும் மொபைல் இணைய சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
Share it if you like it