உத்திரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடந்தன.அதில் வன்முறை ஏற்பட்டதால் போராட்டம் நடத்துவதற்கு போலீசார் தடை உத்தரவு போட்டனர். இந்நிலையில் காங்கிரசை சேர்ந்த இம்ரான் பிரதாப்கார்கி தடை உத்தரவை மீறி குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினார். அதில் அவர் வன்முறை தூண்டும் விதமாக பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த போராட்டன்போது வன்முறை சம்பவங்களை தடுக்க துணை ராணுவ படையினர் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டம் நடந்ததிலிருந்து எட்டு நாட்களுக்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும்,இதற்காக மாவட்ட நிர்வாகம் 1 கோடி ரூபாய் செலவிட்டதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் பாதுகாப்புக்காக செலவிட்ட தொகையை காங்கிரஸ் பிரமுகர் இம்ரான் பிரதாப் கார்கியிடம் தடை உத்தரவை மீறி போராட்டம் நடத்தியதற்காகவும்,வன்முறை தூண்டும் விதமாக பேசியதற்காகவும் அவரிடமிருந்து வசூலிக்க அரசு முடிவு செய்துள்ளது.

தடை உத்தரவை மீறியும் வன்முறையாகவும் பேசிய காங்கிரஸ் பிரமுகருக்கு 1 கோடி அபராதம் !
Share it if you like it
Share it if you like it