Share it if you like it
- உத்தர பிரதேச மாநிலம் மீரட் அருகே உள்ள பஞ்ச்லி குர்த் என்ற கிராமத்தில் பெரும்பான்மையாக இஸ்லாம் சமூகத்தினர் உள்ளனர். அதில் ஒரு ஹிந்து மதத்தை சேர்ந்த ராம்சரித்திரா என்பவரும் வசித்து வந்தனர். கடந்த மாதம் பிப்ரவரி 14 ஆம் தேதி, ராம்சரித்திரா அவர்களின் செல்ல நாய் தங்கள் பக்கத்து வீட்டுகாரரான இஸ்லாமை சேர்ந்த ஷபீரின் பேரனைக் கடித்திருக்கிறது.
- இந்த சம்பவம் தொடர்பாக ஷபீரின் குடும்பத்தினர் மிகவும் கோபமடைந்ததாகவும், ராம்சரித்ராவின் குடும்பத்தினர் வேண்டுமென்றே தங்கள் நாய் ஷபீரின் பேரனைத் தாக்க அனுமதித்ததாகவும் அவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். இதனையடுத்து மார்ச் 8 ஆம் தேதி, ஷபீரின் குடும்பத்தினர் அந்த நாயைத் தாக்கி அடித்து கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
- இதனால் ராம்சரித்ராவின் குடும்பத்தினர் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்களது புகாரை காவல் துறையினர் ஏற்கவில்லை. தன் வீட்டு செல்ல நாயைக் கொன்றதற்காக ஷபீரின் குடும்பத்தினர் மீது புகார் அளிக்கவும் நடவடிக்கை எடுக்கவும் பலமுறை முயற்சித்த போதிலும், இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்று ராம்சரித்திரா மக்கள் தீபா தெரிவித்துள்ளார்.
- இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான ராம்சரித்திராவின் குடும்பத்தினர் ஊரை விட்டே சென்றுவிட்டதாக அந்த ஊர் மக்கள் கூறியுள்ளனர்.
source : opindia
Share it if you like it