மத்திய அரசுடன் இணைந்து தமிழக அரசும் ஊரடங்கு உத்தரவை தீவிரப்படுத்தியுள்ளது. அண்மையில் ஒரு விவசாயி, தனது தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை, கோயம்பேடு மார்கெட்டிற்கு, கொண்டு செல்ல, காவலர்கள் அனுமதிக்காத காரணத்தால். தனது காய்கறிகளை விவசாயி தெருவில் வீசியது மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் சத்தியமங்கலம் கெட்டவாடியை சேர்ந்த கண்ணையன் என்னும் விவசாயி. தனது தோட்டத்தில், விளைந்த ஒரு லட்சம் முட்டைக்கோஸ்களை. ஊரடங்கு காரணமாக விற்க முடியவில்லை, என்று தனது வேதனையை டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.
இவரின் பதிவை பார்த்த பா.ஐ.க எம்.பி தேஜஸ்வி சூர்யா, அவரிடம் இருந்து ஒரு லட்சம் முட்டைக்கோஸை கொள்முதல், செய்து தனது தொகுதி மக்களுக்கு இலவசமாக வழங்கி இருப்பது. பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சூர்யாவின் இச்செயலுக்கு தமிழக விவசாயி தனது நன்றியினை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Today, we picked up 1 load of cabbages from Chamarajanagar to be given to poor & needy in B'luru South
We've also developed platform for farmers to sell produce directly to apartments
I thank @anvivud, @anuraag_saxena & Foundation India for supporting farmers like @SuKannaiyan https://t.co/s9SAQyBlp5 pic.twitter.com/1MVgtVcwmu
— Tejasvi Surya (@Tejasvi_Surya) April 23, 2020