2105க்கு முன்பு வரை வாரம் ஒருமுறை தமிழக பத்திரிக்கைகளிலே ஒரு துக்க சம்பவம் தலைப்பு செய்தியாக போடப்படும்.
தமிழக மீனவர்களை ஶ்ரீலங்க கடற்படையினர் சுட்டுக்கொன்று விட்டார்கள் என்பது ஒரு தொடர்கதையாகவே இருந்தது. பல காரணங்கள் இதற்கு சொல்லப்பட்டன.
மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்கிறார்கள், மடிவலை பயன்படுத்துகிறார்கள் என பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. தன் குடும்பத்திலே ஒருவரை இழந்த மீனவர்களின் துயரம் சொல்லி மாளாது.
அப்படி துயரப்பட்ட மீனவர்களுக்கு, ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்ட படகுகள், இந்திய ஶ்ரீலங்கா மீனவர்களின் கூட்டுப் பேச்சுவார்த்தை, ஶ்ரீலங்கா கடற்படையும் நமது கடற்படை சேர்ந்து செயல்படுதல், ஶ்ரீலங்கா அரசுடன் பேச்சுவார்த்தை எனும் செயல்கள் மூலம் இந்த துயர சம்பவங்களை அடியோடு நிறுத்தினார் நமது பிரதமர் கோடிக்கணக்கான மக்களின் தனிப்பெரும் தலைவன் நரேந்திரமோடி.
இன்றைக்கு மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவது இல்லை. எல்லை தாண்டினாலும் கைது செய்யப்பட்டு பிறகு விடுவிக்கப்படுகிறார்கள். கடத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை கூட ஶ்ரீலங்க அரசிடம் பேசி விடுவித்தார் நமது தலைவர் நரேந்திரமோடி அவர்கள். இருண்டு கிடந்த மீனவர்களின் வாழ்விலே ஒளியேற்றினார்.
மீனவர்கள் வாழ்வு மட்டுமல்ல பொதுமக்கள் வாழ்வே தொடர் மின்தடையால் இருண்டே கிடந்தது.
தமிழகத்திலே 2008 ஆரம்பித்த மின்வெட்டு எனும் துயரம் 2014 வரை தொடர்ந்தது. அறிவிக்கப்பட்ட மின்வெட்டு, அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின்தடை, முழுநேர மின் தடை என பொதுமக்களின் வாழ்வு இருண்டு கிடந்தது. சிறூ குறு தொழில்கள் முற்றாக அழிக்கப்பட்டன. வசதி படைத்தோர் மின்கலம் மூலம் மின்சாரத்தை சேமித்து பின்பு பயன்படுத்தினார்கள். வசதியற்றோரோ இருளிலே கிடந்தார்கள்.
வடக்கே அதிகம் உற்பத்தியாகும் மின்சாரத்தை தனி மின்பகிர்மான வழித்தடங்கள் மூலம் தமிழகத்திற்கு தருவது. தமிழகத்திலே உற்பத்தியாகும் நிலக்கரியை தமிழகத்திலேயே மின் உற்பத்தி செய்ய வழிவகை செய்வது, தமிழக அனல்மின் நிலையங்களுக்கு தடையின்றி நிலக்கரி கிடைக்க செய்வது, சோலார் மின் உற்பத்தியை அதிகப்படுத்துவது என ஏகப்பட்ட திட்டங்களை நடைமுறைகளை தமிழகத்துக்கு தந்து தமிழர்களின் வாழ்விலே ஒளியேற்றினார் நம் தலைவர் பாரத பிரதமர் நரேந்திரமோடி.
12,000 கிலோ வாட் மின்சாரத்தையே தரமுடியாமல் திண்றிக்கொண்டிருந்த தமிழகம் இன்றைக்கு 18,000 கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து மக்களுக்கு விநியோகம் செய்கிறது. மத்திய அரசு குறைந்தவிலையிலே எல்ஈடி பல்புகள், மின்சாரம் சேமிக்கும் காற்றாடிகள் முதலிய உபகரணங்களை தவணை முறையிலேயும் மொத்த விலைக்கும் அரசு மின்விநியோக இடங்களிலே விற்கவும் ஏற்பாடு செய்தது. இதனால் ஏழை எளியோரின் மின்கட்டணம் பாதியாக குறைந்தது.
முன்பெல்லாம் மாதம் ஒருமுறை தமிழகத்திற்கு தேவையான உரத்தை மத்திய அரசு தங்கு தடையின்றி தரவேண்டும் என தமிழக முதல்வர் கடிதம் எழுதுவது ஒரு வாடிக்கையான நிகழ்வாக தொடர்கதையாக இருந்தது. ஏனென்றால் உரம் தயாரிப்பதிலேயும் உரவ நியோகத்திலேயும் ஏகப்பட்ட சிக்கல்கள் ஊழல்கள்.
மத்திய அரசு உரத்திற்கு மானியம் கொடுத்தால் கூட அதை இடைத்தரகர்கள் எடுத்துக்கொண்டு விவசாயிகளுக்கு உரம் போய் சேரவழியில்லாமல் செய்தார்கள். இதை தடுக்க பலமுயற்சிகளை திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியது.
உரத்திலே வேப்பெண்ணைய் கலக்கப்பட்டது. இதனால் விவசாயிகளுக்கும் வேலைவாய்ப்பு கிடைத்தது. அந்த உரத்தை மற்ற விஷயங்களுக்கு பயன்படுத்த முடியாமல் போய் விவசாயிகளுக்கே கிடைத்தது. உரத்தட்டுப்பாடு அறவே ஒழிந்தது.
சரியானவர்களுக்கு உரம் போய் சேர ஆதார் கார்டு மூலம் உரம் வழங்குதல், அதை வாங்க விவசாயிகளுக்கு வட்டியில்லாத கடன் அட்டை திட்டம். இதிலே குறிப்பிட்ட அளவு பணம் எடுத்துவிட்டு அதை குறிப்பிட்ட நாளுக்கு திருப்பி செலுத்தினால் வட்டி இல்லை என பல திட்டங்களை கொண்டு வந்து விவசாயிகளின் துயரத்தை துடைத்தார் நம் தலைவர் பாரதபிரதமர் மோடி. நெசவாளர்களின் கை நெசவு துணிகளை விற்று தரும் காதி கிராமத்யோக் பவனை நவீனப்படுத்தியதன் மூலம் நெசவாளிகளுக்கு நல்லவருமானம் கிடைக்கவும் வழி செய்தார்.
-ராஜா சங்கர்