கேரள முதல்வரின் நெருங்கிய நண்பரான நடிகர் கமலஹாசன். அம்மாநிலத்தை உதாரணம் காட்டி அவ்வபொழுது தனது கருத்தை டுவிட்டர் பக்கத்தில் தெரிவிப்பதை வழக்கமாக கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே.
தமிழகம் மற்றும் தமிழர்களின் நலனிற்கு விரோதமாக கேரள அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்தால் வாய் மூடி மெளனியாக இருப்பதையே நடிகர் கமலஹாசன் வழக்கமாக கொண்டு உள்ளார் என்பதன் மூலம் அவரின் உண்மை முகத்தையும், சுயரூபத்தையும் தமிழக மக்கள் மெல்ல மெல்ல உணர துவங்கியுள்ளனர்.
- அமைச்சர் எம்.எம் மணி தமிழக பெண்கள் மோசமானவர்கள், தேயிலை தோட்ட அதிகாரிகளுடன் தவறாக நடந்துகொள்பவர்கள் என்று தமிழக பெண்களை கீழ்த்தரமாக விமர்சித்த அயோக்கியன் எம்.எம் மணியை கண்டிக்காமல் மெளனம்.
- பகலிலே பாவம் செய்த பாதிரியாருக்கு எதிராக போராடிய கேரள கன்னியாஸ்திரிகளுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. உடனே நடவடிக்கை எடுங்கள் தோழரை வலியுறுத்தாமல் அதே மெளனம்.
- மருத்துவ கழிவுகள் மற்றும் மாமிச கழிவுகளை தமிழக எல்லை பகுதியில் கொட்டி தமிழகத்தை மாசுப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தனது நெருங்கிய கூட்டாளி பினராய் விஜயனை கேட்டுக்கொள்ளாமல் அதே மெளனம்..
தமிழகத்தை சார்ந்த பெண் ஒருவர் அண்மையில் நீதி கேட்டு கேரள முதல்வர் வரும் வழியில் போராடினார். அப்பெண்னை சந்திக்காமல் அவமதித்து சென்ற முதல்வரை கேரள மக்கள் மற்றும் தமிழக மக்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
தமிழர்கள் நலன், தமிழக நலன், அனைத்திலும் விரோத போக்கையே மேற்கொள்ளும் கேரள கம்யூனிஸ்ட் அரசை கண்டிக்காமலும், தமிழக பெண்ணிற்கு ஆதரவு வழங்காமலும். குணம் ஆகாத குணா மீண்டும் அதே மெளனம் கடைப்பிடிப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளா முதல்வர் பினராயி விஜயன் வாகனம் செல்லும் வழியில் நீதி கேட்டு சாலைமறியல் செய்த தூத்துக்குடி கயத்தாரை சேர்ந்த தமிழச்சி.
கேரளாவில் தமிழர்களுக்கும் ஏழைகளுக்கும் நீதி கிடைப்பதில்லை…
அதை தட்டிக் கேட்க தமிழகத்தில் உள்ள கம்யூனிஸ்டுகளுக்கு 25 கோடி கொடுக்க பணம் இல்லை.. pic.twitter.com/1LE2E87Bd3
— CTR.Nirmal kumar (@CTR_Nirmalkumar) August 16, 2020