தமிழகத்திற்கும் ராமனுக்கும் இடையே நெருங்கிய உறவு இருந்ததற்க்கான பல்வேறு சான்றுகள் மற்றும் ஆவணகங்கள் காணக்கிடைக்கின்றன. குறிப்பாக தமிழ் மன்னர்களான சேர, சோழ, பாண்டியர்களுடன். இதற்க்கு ஆதாரமாக வால்மீகியின் ராமாயணம், பத்துப்பாட்டு போன்ற தமிழ் மற்றும் சம்ஸ்கிருத நூல்களில் பல்வேறு நிகழ்வுகள் கூறப்பட்டுள்ளது. ஆங்கிலேயே ஆட்சியின்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் வெள்ளத்தில் இருந்து இராமன் ஊரை காப்பாற்றிய சம்பவம் இன்றும் அவ்வூர் மக்களால் பேசப்படுகின்றது.
1798 ஆம் ஆண்டு அப்பகுதியில் இருந்த அணை பவீனமாக இருந்தது. மழைக்காலம் தொடங்கினால் அணையில் உடைப்பு ஏற்பட்டு மிகப்பெரிய சேதாரத்தை உண்டாக்கும் என அப்போதைய பிரிட்டிஷ் காலெக்டர் லியோனல் பிளேஸ் எண்ணினார். அப்போது அங்கிருந்த வைஷ்ணவ திருமதுரை திருத்தலத்தில் கற்கள் அடுக்கிவைத்திப்பதை கண்டு அங்குள்ள கோவில் அர்ச்சர்கர்களிடம் அது குறித்து விசாரித்தார். அவர்கள் ஜனகவள்ளி தாயாருக்கு தேவிக்கு தனியே சன்னதி அமைப்பதற்காக கற்களைஅடுக்கி வைத்திருப்பதாக அவரிடம் விளக்கினார்கள்.
இதைக்கேட்ட லியோனல் பிளேஸ் அப்படியென்றால் இதுபோன்ற இக்கட்டான சூழலில் இருந்து ராமன் ஏன் காப்பாற்ற வரவில்லை என அலட்சியமா கேட்டார். சில நாட்கள் பெய்த தொடர்மழைக்கு பின்னர் லியோனல் பிளேஸ் அணையை காணச்சென்றார், அப்போது அவர் கண்டதை அவர் கண்களாலே நம்பமுடியவில்லை. அணை உடையாமல் இரு பலம்பொருந்திய வீரர்கள் தாங்கிப்பிடித்துக்கொண்டிருந்தனர். இவரை தவிர மற்ற யாருக்கும் இக்காட்சி புலப்படவில்லை. இது அவருக்கு புதிராகவே இருந்தது. பின்னர் இது இராமலட்சுமனர்கள் தான் என்ற முடிவுக்கு அவர் வந்தார்.
மழைபெய்து முடிந்த பின்னரும் அணை பழுதடையாமல் பாதுகாப்பாகவே இருந்தது. இது கலெக்டருக்கு இன்னும் ஆச்சரியத்தை கூட்டியது. பின்னர் தனது சொந்த செலவிலேயே ஜனகவள்ளி தாயாருக்கு திருமதுரை கோவிலில் தனியே சன்னதி கட்டிக்கொடுத்தார். இன்று அக்கோயில் ‘ஏரி காத்த ராமர் கோவில்’ என்றே அனைவராலும் அழைக்கப்படுகிறது. இன்றும் கலெக்டர் கோவில் கட்ட உதவிசெய்தது குறித்து அங்கு கல்வெட்டு உள்ளது.
Jai shriram!