அண்மையில் தலைமை செயலாளரை சந்தித்து தயாநிதி மாறன் மனுக்களை கொடுத்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசும்போது, “எங்களை மூன்றாம் தர மக்கள் போல் நடத்தினர். நாங்கள் என்ன தாழ்த்தப்பட்ட மக்களா, தாழ்த்தப்பட்ட ஆட்களா?”, என்று கூறியுள்ளார்.
திரு.தயாநிதிமாறன் அவர்களின் சாதி ஆணவப் பேச்சு பட்டியல் சமூகத்தவனாகிய என்னையும், என் சமூக மக்களையும் பாதித்திருக்கிறது. ஆதலால், எல்லா மக்களும் சமம் என்று சட்டம் கூறுகிற வேளையில் பட்டியல் சமூக மக்களை கேவலப்படுத்தும் விதமாக பேசியிருக்கிருக்கும். அவரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று மா.வெங்கடேசன் காவல்துறையில் புகார் தெரிவித்திருந்தார்.
— Ma.Venkatesan CHAIRMAN (NCSK) (@MaVeWriter) May 15, 2020
தமிழக காவல்துறை திரு.தயாநிதிமாறன் மீது புகார் செய்தும் எந்தவிதமான பதிலும் வரவில்லை. அதனால் இன்று தேசிய பட்டியல் சமூக ஆணையத்திற்கு (National Commission for Scheduled Caste) நடவடிக்கை எடுக்க கடிதம் அனுப்பியுள்ளேன். முடிந்தவரை யார் யாரெல்லாம் இதுபோன்ற புகார் கடிதம் அனுப்ப முடியுமோ அவர்கள் அனுப்ப வேண்டுகிறேன். என்று மா.வெங்கடேசன் கேட்டு கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆணையத்தின் இமெயில் : [email protected]