கடந்த சிலநாட்களுக்கு முன்னர் தமிழக அரசு மாநிலம் முழுவதும் சுமார் 1018 ஊர்களின் பெயரை உச்சரிப்பிற்கேற்றவாறு மாற்றியது. இதனை தொடர்ந்து சென்னையில் உள்ள புனித தோமையர்மலை என்று திமுக ஆட்சிக்காலத்தில் பெயர்மாற்றப்பட்ட பிருங்கி மலைக்கு மீண்டும் அதே பெயரை சூட்டவேண்டும் என கோரிக்கை வலுத்துவந்தது. இதனால் நேற்று இரவு சமூக வலைதளங்களில் #பிருங்கி_மலை என தேசிய அளவில் ட்ரெண்டிங் ஆனது. மேலும் அம்மலையில் வாழ்த்த தமிழ் முனிவர் பிருங்கி மகரிஷியின் வரலாற்றை பெரும்பாலானோர் பகிர்ந்தனர்.
ஒரு ஊரின் வரலாற்றை தெரிந்துகொள்ள அதன் பெயர் மிகவும் அவசியம் ஆனால் வாக்கு வங்கிக்காக பிருங்கி மலையின் வரலாற்றை மறைத்து கிறிஸ்தவ பெயரை சூட்டிய திமுகவின் வரலாற்றுப் பிழையை இப்போதுள்ள தமிழக அரசு துடைத்தெறிய வேண்டும் என மக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.
Not this hill