டெல்லியில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுவந்த ரோஹித் தத்தா என்பவர் அரசு மருத்துவமனையில் தான் ஒரு நட்சத்திர விடுதியில் தங்கியதை போன்று கவனித்து கொண்டதாகவும். மத்திய அமைச்சர் தன்னுடன் அடிக்கடி உரையாடியதாகவும் கூறி நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கொரோனா தோற்று இருப்பதாக கண்டறியப்பட்டு முதன்முதலில் தனிமை வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்ட ரோஹித் தத்தா என்பவர் பூரண நலமடைந்து வீடு திரும்பிய பிறகு நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் 5 நட்சத்திர விடுதி அறைக்கு இணையாக அரசு மருத்துவமனையில் தான் தங்கி இருந்த கொரோனா சிகிச்சை வார்ட் இருந்ததாகவும், தினமும் தன் வீட்டாருடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் தன்னை பேச வைத்ததாகவும், பொழுதுப்போக்க நெட்பிளிக்ஸ் இணையத்தையும் பார்க்கவும். தனது அறையில் குளிர்சாதன வசதி போன்றவை செய்யப்பட்டிருந்ததாகவும், தினமும் இரண்டுமுறை தனது அறையை சுத்தம் செய்து படுக்கை விரிப்புகளை மாற்றியதாகவும், இவற்றுக்கெல்லாம் மேலாக ஹோலி திருநாள் அன்று மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தன்னுடன் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்து உரையாடியதாகவும் மேலும், நான் எப்படி உணர்கிறேன், எனக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருக்கிறதா, மருத்துவமனையில் உணவு எனக்கு பிடித்திருக்கிறதா என்றும் கேட்டார். கொரோனா நோயாளிகளின் நிலையை அவரும் பிரதமர் மோடியும் தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருவதாக அவர் தெரிவித்தார். நாட்டின் சுகாதார அமைச்சர் தொடர்பு கொண்டதை கற்பனை செய்ய முடியவில்லை, அவ்வளவு எளிமையான மனிதர் என அவர் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.