என்னால் முடிந்த உதவிகளை நான் செய்கிறேன். கொரோனா எதிரொலியை கருத்தில் கொண்டு, ஏழைகளுக்கு உதவ பணக்காரர்கள், முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக தங்களால், இயன்ற உதவிகளை மக்களுக்கு நடிகர்கள், நடிகைகள், அந்தந்த மாநில அரசுகளின், வேண்டுகோளுக்கு இணங்க, நிதி மற்றும் தேவையான மருத்துவ, பொருட்களை வழங்கி வருகின்றனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், என அனைத்து மொழிகளிலும் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ரோஜா. இவர் ஆந்திர மாநிலம் நகரியில் இருந்து, எம்.எல்.ஏ வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
நகரி மற்றும் புத்தூர் நகர சபையில், பணியாற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள், மற்றும் பிற பணியாளர்களுக்கு, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு, தினமும் வரும் ஏழைகள், நோயாளிகள், ஆதரவற்றோர், என அனைவருக்கும் தரமான உணவை ரூ 4-க்கு வழங்கி வருகிறார். போலீசார் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் நலன் கருதி. தினமும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட, நபர்களுக்கு உணவு தயாரித்து வழங்கி வருகிறது ரோஜா சாரிடபுள் டிரஸ்ட்.
https://www.facebook.com/RojaSelvamani.Ysrcp/videos/2322751468016075/
என்னால் முடிந்ததை நான் செய்கிறேன், கொடிய கொரோனா தொற்று நிலவும் இச்சூழ்நிலையில் உணவு இன்றி, தவிக்கும் ஏழைகளுக்கு உதவ, பணக்காரர்கள் முன் வர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.