திமுகவின் தில்லுமுள்ளு !

திமுகவின் தில்லுமுள்ளு !

Share it if you like it

கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை சட்டசபையில் அமல்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல கட்சிகள் போராட்டம் நடத்தியது. அந்த போராட்டம் நடத்திய கட்சிகளில் திமுகவும் ஒன்று. சமீபத்தில் திமுக கட்சியின் தலைவர் ஸ்டாலின் அவர்கள் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து கையெழுத்து இயக்கம் ஒன்றை தொடங்கி பொதுமக்கள் பலரிடம் கையெழுத்து வாங்கினார். குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக 2 கோடி கையெழுத்துக்கள் பெறவேண்டும் என்பது திமுகவின் இலக்காக இருந்தது. எனவே ஒரு வார்டில் குறைந்தது 1000 பேரிடம் கையெழுத்து வாங்க வேண்டும் என்று திமுகவின் தொண்டர்கள் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் செயல்பட்டில் இறங்கினர். விபரம் தெரியாத பொதுமக்கள் சிலர் மட்டும் கையெழுத்து போட்டனர்.பெரும்பாலான மக்கள் யாரும் கையெழுத்து போட முன் வரவில்லை.ஏனெனில் மோடியும் அமித்ஷாவும் இந்த சட்டத்தினால் இந்தியாவில் உள்ள 130 கோடி குடிமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என விளக்கம் அளித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் பொதுமக்கள் யாரும் கையெழுத்து போட முன் வராததால் திமுகவின் தொண்டர்களே
கையெழுத்துக்களை அவர்களே பெயர்களை மாற்றி மாற்றி போட்டு அந்த படிவத்தை திமுகவின் தலைமையகத்தில் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 2 கோடி கையெழுத்துக்கள் பெற்றுவிட்டதால் அந்த படிவத்தை டெல்லியில் மத்திய அரசிடம் ஒப்படைப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் திமுகவின் பெண் உறுப்பினர் ஒருவர் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கி கொண்டிந்தபொழுது திமுகவின் துரதிர்ஷ்டவசமாக CAA வை பற்றி நன்கு தெரிந்த நபரை அழைத்து கையொப்பம் கேட்க அந்த இளைஞர் விளக்கம் கேட்க விளக்கம் அளிக்க தெரியாமல் அங்கிருந்து அந்த திமுகவின் பெண் உறுப்பினர் ஓட்டம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த காட்சி இணையதளத்தில் வைரலானது.


Share it if you like it