மறைந்தாலும் வாழ்ந்துக்கொண்டு இருக்கும்-சுரேந்திரன்!

மறைந்தாலும் வாழ்ந்துக்கொண்டு இருக்கும்-சுரேந்திரன்!

Share it if you like it

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த சுரேந்திரன் வயது (20)  என்னும் வாலிபர் சேலம் வாழப்பாடியில் உள்ள கோழிப்பண்ணையில் மேற்பார்வையாளராக பணிபுரிகிறார். இந்நிலையில்  தனது சொந்த கிராமத்தில் இருந்து  வழக்கம் போல் தனது பஜாஜ் பல்சரில் பணிக்கு சென்று கொண்டு இருக்கும் பொழுது எதிர்பாரதவிதமாக சாலைவிபத்து ஏற்பட்டு  அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மருத்துவர்களின் தீவிர முயிற்சி பலனின்றி எதிர்பாரதவிதமாக  நேற்று அதிகாலை 4.00 மணியளவில் மூளைச்சாவு அடைந்தார். இது அவர்களின் குடும்பத்தினர் மத்தியிலும், கிராமத்திலும் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையில் சுரேந்திரனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரின்  பெற்றோர்கள் ஜெயக்குமார், ராணி முன் வந்தனர்.

இதனை அடுத்து கோவை அரசு மருத்துவமனைக்கு  ஒரு சிறுநீரகமும், கங்கா மருத்துவமனைக்கு எலும்பு மற்றும் தோல், சேலம் மணிப்பால் மருத்துவமனைக்கு கல்லீரல், சேலம் அரசு மருத்துவமனைக்கு ஒரு சிறுநீரகம், கண்கள், தானமாக வழங்கப்பட்டது.

இதயம் விமானம் மூலம் சென்னை குளோபல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சுரேந்திரன் மறைந்தாலும்   உடல் உறுப்பு தானம் மூலம் இன்னும் நம்மிடையே அவர் வாழ்ந்துக்கொண்டு தான் இருப்பார் என்பது திண்ணம்.


Share it if you like it