திமுகவை சார்ந்த தமிழச்சி தங்கபாண்டியன் சமீபத்தில் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் சென்னை சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்கு 30 நிமிடங்களுக்குமேல் வாகனம் காத்திருக்கவேண்டியுள்ளது. இதனால் பயணியர் மிகவும் அவதியுறுகின்றனர். எனவே இந்த சுங்க சாவடிகளை அகற்ற வேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைத்துள்ளார். இதனை கண்ட அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் தென் சென்னை MP வைத்துள்ள கோரிக்கையின்படி சுங்கச்சாவடிகள் மாநில நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ளன.இந்த சுங்கச்சாவடிகள் அகற்ற வேண்டுமெனில் தமிழக அரசிடம்தான் இந்த கோரிக்கை வைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.திமுகவில் நன்கு படித்து நாடாளுமன்ற உறுப்பினராக
உள்ள தமிழச்சி தங்கபாண்டியனுக்கே தெரியவில்லை என்பது வேடிக்கையாக உள்ளது என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் போட்டும் கலாய்த்து வருகின்றனர்.
சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுகவின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து வாக்கு சேகரிக்கும் வகையில் அழகான வேட்பாளரை மிஸ் பண்ணிடாதீங்க என்று கூறினார் என்பது குறிப்பிடதக்கது.