சாலை விதிகளை மதிப்போம் துயரங்களை தவிர்ப்போம்!

சாலை விதிகளை மதிப்போம் துயரங்களை தவிர்ப்போம்!

Share it if you like it

போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் வாகன பெருக்கம் காரணமாக சாலை விபத்துகள் மற்றும் எதிர்பாரத அசம்பாவிதங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கிறுது. தமிழகத்தில்  2.90 கோடி வாகனங்கள் உள்ளது . இதில் 2.40 கோடி இருசக்கர வாகனங்கள் மட்டுமே  என்பது கவனத்திற்குரியது.

உரிமம் இல்லாமல் ஓட்டுவது, அதிவேகம் போன்றவை  இருசக்கர வாகனங்களால் மட்டுமே ஏற்படும் அதிக  விபத்துக்கள் ஆகும். கடந்த 2016ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த சாலை விபத்துகளில் 17 ஆயிரம் பேர் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர்,இந்தியாவில் ஏற்பட்ட விபத்துகளிலே இது தான் அதிகம் என்பது அதிர்ச்சிக்குரிய தகவல்.

இளம் வயதில் விதவை ஆகும் பெண்கள் உள்ள மாநிலத்தில் தமிழகம் முதன்மையாக உள்ளது இதற்கு முக்கிய காரணம் மது. மேலும் மது அருந்தியோர் வாகனம் ஒட்டும் பொழுது தானும் பாதிக்கப்பட்டு மற்றவர்களின் உயிருக்கும், உடைமைக்கும் பெருத்த தேசத்தை  ஏற்படுத்துகின்றனர்.  தமிழகத்தில்  3 சதவீதம் மட்டுமே  தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன ஆனால் இங்கு தான்  40 சதவீத உயிரிழப்பு ஏற்படுகிறது. என்று தென்காசியில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் அம்மாவட்ட போக்குவரத்து ஆனணயர் ஜவஹர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சில மாதங்களுக்கு முன்  மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி நாக்பூரில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு  அவர் இவ்வாறு கூறியுள்ளார். நாடு முழுவதும் ஆண்டுத்தோறும் 5 லட்சம் சாலை விபத்துக்கள் ஏற்படுகிறது. இதில் 1.5 லட்சம் பேர் மரணம் அடைவதும், சுமார் மூன்றரை லட்சம் பேர் காயமடைகின்றனர் இது மிகவும் கவலையளிக்கிறது.

நாடு முழுவதும் ஜனவரி 11-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை சாலைப் போக்குவரத்து வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. எத்தனையோ நடவடிக்கைகளை எடுத்தும் கூட சாலை விபத்துகளின் எண்ணிக்கையை அரசால் குறைக்க முடியவில்லை.

சாலை விபத்துகளில் நேரிடும் உயிரிழப்புகளால் மட்டும் நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 2 சதவீதம் இழப்பு ஏற்படுகிறது. மக்கள் மத்தியில் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வும், அதனை பின்பற்ற வேண்டும் என்ற கடமை உணர்வுமே சாலை விபத்துகளை தடுக்க முடியும். இவ்வாறு அவர்  கூறியுள்ளார்.

 


Share it if you like it