கம்பர்+ராமாயணத்தை கௌரவித்த இந்தியன் ரயில்வே!

கம்பர்+ராமாயணத்தை கௌரவித்த இந்தியன் ரயில்வே!

Share it if you like it

ஹிந்துக்களின் புனித  தலங்களை பற்றி மக்கள் அறிந்துக்கொள்ளவும் சுற்றுலாவை மேம்படுத்தவும்  “ராமாயண ராத்திரை” என்ற பெயரில் இந்திய  ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமானது (IRCTC)  சிறப்பு ரயில் ஒன்றை மக்களின் பயன்பாட்டிற்காக அறிமுகம் செய்துள்ளது.

இந்த யாத்திரையானது திருநெல்வேலியிலிருந்து  (05.03.2020) தொடங்கி (13)   நாட்கள்  ஹம்பி-நாசிக்- சித்திரக்கூடம்-வாரணாசி – பக்ஸர்-ரகுநாத்பூர்-சீதாமார்ஹி ஜனக்புரி(நேபாளம்)-அயோத்யா- நந்திகிராமம்-அலகாபாத்-சிருங்கவெற்பூர் ஆகிய தலங்களை தரிசிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும்  திருநெல்வேலி,மதுரை,திண்டுக்கல், கரூர், ஈரோடு, காட்பாடி, ஜோலார்பேட்டை,சென்னை சென்ரல் ஆகிய மாவட்ட பகுதிகளில் உள்ள ரயில் நிலையங்களில் பயணிகளை ஏற்றிச் செல்லவும்  அதேபோல் ஆன்மீக தலங்களை தரிசித்துவிட்டு மீண்டும் பயணிகள்

சென்னை சென்ட்ரல், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி ஆகிய மார்கங்களில் உள்ள ரயில் நிலையங்களில்  இறங்கி கொள்ளவும் ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது.

மேலும்  கம்பராமாயணத்தில்  குறிப்பிட்டுள்ள கிஷ்கிந்தா காண்டம் ,ஆரண்ய காண்டம்,அயோத்யா காண்டம்,பால காண்டம்,சுந்தர கண்டம்,யுத்த காண்டம்  என இந்த ஆறு காண்டங்களின் வழியே தமிழையும், கம்பரையும் பெருமைப்படுத்தும் நோக்கில் பயண அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it