புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் கிருஷ்ணசாமி அண்மைகாலமாக திராவிட கட்சிகள் செய்யும் தவறுகளை மிகவும் துணிச்சலாகவும், ஆதராபூர்வமாகவும், சுட்டிக்காட்டி வருகிறார்.
திமுகாவின் ஜடி.விங் இணையதள பக்கத்தில் பின்வருமாறு கருத்து தெரிவிக்கப்பட்டு இருந்தது.
குறிப்பிட்ட சமூகத்தினருக்கு கல்வி – சமஸ்கிருதம் தெரிந்தால் மட்டுமே மருத்துவக்கல்வி என்றிருந்த நிலையை திராவிட சித்தாந்தம் மாற்றவில்லை எனில் இப்படி பெயருக்கு முன்னால் Doctor ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ள முடியுமா என்பதை சில்லறை சீர்திருத்தவாதிகளும், சங்கிகளும் சற்றே சிந்திக்க வேண்டும்.
ஷியாம் கிருஷ்ணசாமி திமுகவின் ஜடி.விங் பதிவிற்கு இவ்வாறு பதிலளித்துள்ளார்.
உங்க கதை எல்லாம் முரசொலி படிக்கிற சில்லறைகள் நம்பலாம். இங்கே வேகாது. William Bentinck, பிரிட்டிஷ் இந்தியாவின் கவர்னர் ஜெனரல் 1835ஆம் ஆண்டே இந்தியாவில் மருத்துவ கல்வி ஐரோப்பிய முறைப்படி ஆங்கில மொழியில் மட்டும் அனைத்து சாதியினருக்கும் சென்றடைய சட்டம் இயற்றி அமலுக்கு கொண்டுவந்தார்.
உங்க கதை எல்லாம் முரசொலி படிக்கிற சில்லறைகள் நம்பலாம்.
இங்கே வேகாது.William Bentinck, பிரிட்டிஷ் இந்தியாவின் கவர்னர் ஜெனரல் 1835ஆம் ஆண்டே இந்தியாவில் மருத்துவ கல்வி ஐரோப்பிய முறைப்படி ஆங்கில மொழியில் மட்டும் அனைத்து சாதியினருக்கும் சென்றடைய சட்டம் இயற்றி அமலுக்கு கொண்டுவந்தார். https://t.co/AxhS2Q95fm pic.twitter.com/LePQvvSqV1
— Shyam Krishnasamy (@DrShyamKK) July 10, 2020