துணை ராணுவப் படைகளில் மூன்றாம் பாலினத்தவரை சேர்க்க மத்திய தீர்மானித்துள்ளது.
பாரதப் பிரதமராக மோடி பதவி ஏற்றதில் இருந்து அனைவரும் ஒன்றாக இணைந்து உயர்வோம் என்று தொடர்ந்து கூறி வருகிறார். விண்ணில் தொடங்கி கடலின் ஆழம் வரை சென்று பெண்கள் பல துறைகளில் இன்று வரை சாதித்து வருகின்றனர்.
அனைத்து தரப்பு மக்களும் இவர்களிடம் ஆசிர்வாதம் வாங்க வேண்டும் என்று நினைப்பது திருநங்கையிடம் மட்டுமே. அவர்களும் தற்பொழுது பல துறைகளில் சாதித்து வருகின்றனர். நாட்டின் வளர்ச்சிக்காக இவர்களின் உழைப்பு, திறமை, ஆற்றல், ஆகியவற்றை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு தீர்மானித்துள்ளது.
மத்திய ரிசர்வ் போலீஸ் படை, இந்திய திபெத்திய எல்லைப் பாதுகாப்பு படை, மத்திய தொழிலக பாதுகாப்பு படை உள்ளிட்ட அனைத்து துணை ராணுவ படைகளிடமும் இது தொடர்பான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் மோடி அரசு கருத்து கேட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டிலேயே முதல் முறையாக மூன்றாம் பாலினத்தவருக்கான பல்கலைக்கழகம் உத்தர பிரதேசத்தில் உள்ள குஷி நகரில். யோகி ஆதித்யநாத் அரசு அண்மையில் துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.