விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஹிந்துக்களின் உணர்வுகளையும், வழிபாட்டு முறைகளையும், கடுமையாக விமர்சனம் செய்ய கூடிய நபர்களில் ஒருவர். திருமாவளவனின் அக்கா அண்மையில் இயற்கை எய்தினார். இதனை அடுத்து 16-ஆம் நாளையொட்டி துக்கம் அனுசரிக்கும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் திருமாவளவன் வெளியிட்டுள்ளதற்கு நெட்டிசன்கள் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#துக்கநீப்பு: அக்கா மறைந்து 16ஆம் நாள் இன்று காலை10 மணிக்கு ஊர்வழக்கப்படி துக்கம் நீக்கும் சடங்குகள் செய்கின்றனர். #படத்திறப்பு நிகழ்வு இல்லை. கூட்டம் குவிவதைத் தடுக்கவே அது தவிர்க்கப்பட்டுள்ளது. மாலை 5 மணிக்கு இணையவழி நினைவேந்தல் #zoom மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. #rituals pic.twitter.com/hIbQrD6HZf
— Thol. Thirumavalavan (@thirumaofficial) August 20, 2020
அய்யா, இப்பொழுது எங்கே போனது உங்கள் கடவுள் மறுப்பு கொள்கை, திராவிட சித்தாந்தம், பகுத்தறிவு, பார்ப்பன எதிர்ப்பு என்று மேடைக்கு மேடை திட்டி தீர்த்து விட்டு இப்பொழுது நடு வீட்டில் அமர வைத்து சடங்கு சம்பிரதாயம் செய்கிறீர்கள்.
— Thangamramesh (@Thangamramesh3) August 20, 2020
என்னதான் பகுத்தறிவு பேசினாலும் உறவுக்கு என்று வரும்போது இந்த சடங்குகளை செய்தே ஆக வேண்டும் என்ற பயம் உண்டு.என்னதான் சனாதனதர்மத்தை பழித்தாலும் வீட்டிலுள்ள பெண்மையே வெல்லும். Hinduism
— Suresh Vasudevan (@sureshvasudeva2) August 20, 2020