பல புண்ணிய தலங்களை கொண்ட மாநிலம் என்ற பெருமைக்குரியது தமிழகம். ஆனால் நேர்மையற்ற இந்து அறநிலையத்துறையின் கீழ் பல ஆலயங்களின் சொத்துக்கள், சிலைகள், நகைகள் அறநிலையதுறை என்ற போர்வையில் பகல் கொள்ளையில் ஈடுப்படுவதும் அதனை வெளிநாடுகளில் இருந்து மீட்டு வருவதையும் அவ்வபொழுது செய்தித்தாளில் நாம் காண முடியும்.
இந்நிலையில் திருவல்லிக்கேணி பார்பர்ஸ் பிரிட்ஜ் சாலை, 2வது சந்தில், கோவிலுக்கு சொந்தமான குடியிருப்பை மகமது காசீம் என்பவருக்கு வாடைக்கு விட்டு சிறந்த முறையில் கல்லாடி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொந்த வீடு போல் வாழ்ந்த காசீம் தன் நண்பர் மூலம் தான் வாழும் வீட்டை விற்குமாறு கூறியுள்ளார். அவரும் ஓ.எல்.எக்ஸில் 30 லட்ச ரூபாய்க்கு கோவின் சொத்தை ஏலம் விட்டு ஏப்பம் விடும் நிலையில். ஆலய நிர்வாகம் காவல்துறையில் புகார் அளித்தது. அதனை அடுத்து விசாரனண மேற்கொண்டதில் அது தீர்த்தபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமானது என்று தெரியவந்துள்ளது.
கோவில் சொத்துக்களை ஆன்லைனில் விற்கும் நிலைக்கு போனது கூடவா அறநிலையதுறைக்கு தெரியவில்லை என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.