Share it if you like it
- சமீபத்தில் ஜம்மு காஷ்மீரில் அதிகம் தேடப்பட்டு வந்த பயங்கரவாதிகளில் ஒருவரும் பயங்கரவாத ஹிஸ்புல் முஜாஹிதீன் குழுவின் தளபதியுமான ரியாஸ் நாய்கூவை நமது ராணுவ வீரர்கள் சுட்டு கொன்றனர். இந்த சம்பவத்திற்கு பின் சில ஊடகங்கள் அந்த தீவிரவாதியின் பெயர், முகவரி, அவருக்கு பிடித்தது பிடிக்காதது, அவர் பள்ளியில் படித்தது, கல்லுரியில் பிடித்தது, அவன் என ஒன்று விடாமல் அனைத்து தகவல்களையும் பத்திரிகையளர்கள் சேகரித்து அதை ஊடகங்களில், பத்திரிகைகளில் வெளியிட்டனர்.
- ஜம்மு-காஷ்மீரின் ஹண்ட்வாராவில் திங்களன்று துணை ராணுவப் படையினர் மீது பயங்கரவாதிகள் தாக்கப்பட்டதில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் மூன்று ஜவான்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஏழு பேர் காயமடைந்தனர். இந்த செய்தியை சில ஊடகமும் ஒருமுறை கடமைக்கென்று வெளியிட்டனர். மற்றபடி அவர்களைப்பற்றி எந்த செய்தியும் எந்த தகவலையும் வெளியிடவில்லை. ஒரு தீவிரவாதி இறந்தால் அவனை பற்றி எல்லா விவரங்களையும் சேகரித்து செய்தியாக வெளியிடுகின்றனர்.
- அதென்ன ஒரு தீவிரவாதிக்கு கொடுக்கக்கூடிய முக்கியத்துவத்தை, நாட்டை காப்பாற்றக்கூடிய வீரருக்கு கொடுக்க மறுக்கிறீர்கள். அவர்களுக்கு தேசநலனில் அக்கறை இருந்திருந்தால் தீவிரவாதியை பற்றி ஊடகங்களில் ஒளிபரப்பாமல் நாட்டிற்காக தனது இன்னுயிரை அர்ப்பணம் செய்த ராணுவ வீரர்களை பற்றி சாதனைகளை பற்றி ஒளிபரப்பியிருப்பார்கள். இவ்வாறு நெட்டிசன்கள் ஊடகத்துறை சார்ந்தவர்களுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்
Share it if you like it