கொரோனா தொற்றுடன் மருத்துவமனையில் இருந்து தப்பித்தால் 10 லட்சம் அபராதம் மற்றும் 3 வருடம் சிறை- யோகி அதிரடி!

கொரோனா தொற்றுடன் மருத்துவமனையில் இருந்து தப்பித்தால் 10 லட்சம் அபராதம் மற்றும் 3 வருடம் சிறை- யோகி அதிரடி!

Share it if you like it

இந்தியாவிலேயே அதிரடி அரசியலுக்கு சொந்தக்காரர் யோகி ஆதித்யநாத் ஆவார். சமூக விரோத சக்திகளுக்கும், சட்ட ஒழுங்கை சீர்குலைக்க, முயற்சிக்கும் நபர்களுக்கும். இவர் கொடுக்கும் கஷாயம் உலகில் எந்த ஒரு மருத்துவ குறிப்பிலும் பார்க்க முடியாது என்பது அனைவரின் கருத்தாக உள்ளது.

C.A.A கலவரம் – நாசக்காரர்களிடம் நஷ்டஈடு வாங்கிய உ.பி அரசு.

அண்மையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல அப்பாவி மக்களின் உயிருக்கும், உடைமைக்கும், பொது சொத்துக்கும். எதிர்க்கட்சிகளின் தூண்டுதலின் பெயரில் கடும் சேதம் ஏற்படுத்தியவர்களை அடையாளம் கண்டு.

மக்கள் அதிகம் கூடும் சாலையின் ஒரத்தில், புகைப்படத்துடன் கூடிய பெரிய பேனரில் வன்முறையை தூண்டிய இவர்கள். அரசிற்கு நஷ்ட ஈடு உடனே தர வேண்டும் அல்லது சிறை செல்ல நேரிடும் என்று எச்சரித்து பேனர் வைத்தார்.

இதனை அறிந்த பலர் மானம், மரியாதை, போகிறது. என்று தங்கள் தவறுகளை உணர்ந்து தாமாகவே முன் வந்து நஷ்ட ஈடுகளை வழங்கி விட்டனர்.

அண்மையில் மீண்டும் ஒரு அதிரடி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார் யோகி.

  • கொரோனா அறிகுறிகளை மறைக்கும் நபர்களுக்கு 50 ஆயிரம் அல்லது 1 லட்சம் அபராதம். மற்றும் 1 அல்லது 3 வருடம் சிறை தண்டனை.
  • கொரோனா தொற்றுடன் பயணம் மேற்கொள்ளும் நபர்களுக்கு 50 ஆயிரம் அல்லது 2 இலட்சம் அபராதம். மற்றும் 1 அல்லது 3 வருடம் சிறை தண்டனை.
  • தூய்மை பணியாளர்களிடம் தவறாக நடந்து கொண்டால் 50 ஆயிரம் அல்லது 1 லட்சம்  அபராதம். மற்றும் 1 அல்லது 3 வருடம் சிறை தண்டனை.
  • கொரோனா தொற்றுடன் மருத்துவமனையில் இருந்து தப்பித்தால் 10 லட்சம் அல்லது 1 லட்சம் அபராதம். மற்றும் 1 அல்லது மூன்று வருடம் தண்டனை.

Share it if you like it