Share it if you like it
- மே 21, அன்று நமது நாட்டில் தீவிரவாத எதிர்ப்பு நாளாக கொண்டாடுகிறோம். தீவிரவாதத்தால் உயிர் இழந்தவர்களை நினைவில் கொண்டு அந்த நாளில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம். தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கிறோம்.
- இந்த நாளில், தமிழகத்திற்கும் தீவிரவாதத்திற்கும் எப்பொழுது பரஸ்பர அறிமுகம் ஆனது? அது எப்பொழுது அதி தீவிரம் அடைந்தது? தற்பொழுது அது முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விட்டதா? அல்லது எங்கோ ஒரு மூலையில் ஒரு சிறிய நெருப்பு துண்டு அமைதியாக புகைந்து கொண்டு இருக்கிறதா ? என பார்ப்போம்.
- அதற்கு முன் தமிழகத்தில் நடந்த வெவ்வேறு பெரிய தீவிரவாத தாக்குதல்களும், அந்த தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கையையும் பார்ப்போம்.
- ஆகஸ்ட் 2, 1984, மீனம்பாக்கம் விமான நிலையத்தில் குண்டு வெடிப்பு, 30 பேர் மரணம், 25 பேர் படுகாயம்
- மே 21, 1991, முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை, 15 பேர் மரணம்,
- ஆகஸ்ட் 8, 1993, சென்னை RSS அலுவலகம் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல், 11 பேர் மரணம், 7 பேர் படுகாயம்.
- பிப்ரவரி 14, 1998, கோவை தொடர் வெடிகுண்டு நிகழ்வுகள், 58 பேர் மரணம், 200+ பேர் படுகாயம்
- 1 மே 2014, சென்னை சென்ட்ரல் ரெயில்நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல். ஒருவர் மரணம், 14 பேர் படுகாயம்
- இதற்கு பின்னரும் இந்த தீவிரவாத குழுக்கள் பல தாக்குதலுக்கு தமிழகத்தை குறி வைத்த பொழுதும் அதை நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு வெகு நேர்த்தியாக தகர்த்து கொண்டே வந்து உள்ளது.
- உதாரணமாக, இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்புக்கு முன்னரே, நமது நாடு இலங்கை அரசை உளவுத்துறை வாயிலாக எச்சரிக்கை செய்தததுடன் நமது கடற்பரப்பை நமது கப்பல் படை உதவியுடன் ஒரு அரண் அமைத்து எந்தவித அசம்பாவிதமும் நடக்காத வண்ணம் பாதுகாத்து உள்ளது.
- எந்த நாள், எந்த நேரத்திற்கு தாக்குதல் நடக்க உள்ளது என்று மட்டும் அல்ல, அநேகமாக தாக்குதல் எங்கு நடக்க இருக்கிறது என நமது உளவுத்துறை தகவல் கொடுத்தும், இலங்கை அரசு தூங்கி விட்டது. விளைவை பற்றி சொல்லவேண்டியதே இல்லை.
- சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய தாக்குதலில் தமிழகத்திற்கு அறிமுகம் ஆன தீவிரவாதம், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலையில் தான் முழு உருவம் பெற்றது.
- சென்னை RSS அலுவலகம் மீதான தாக்குதல், கோவை தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலும் மாநிலத்திலும், மத்தியிலும் இருந்த அரசாங்கங்கள், சிறுபான்மை இனத்திற்கு கூஜா தூக்கி அவர்களை ஏகோபித்தமாக வளர்த்து விட்டதின் விளைவு.
- தமிழகத்தில் தீவிரவாதம் முழுவதுமாக ஒழித்துக்கட்ட பட்டு விட்டதாக என கேட்டால், இல்லை வாலை மட்டுமே நறுக்கி இருக்கிறோம், தலை இன்னும் சுவாசித்து கொண்டு தான் இருக்கிறது. இதற்கு சரியான உதாரணம், களியக்காவிளை சிறப்பு காவல் அதிகாரி வில்சன் தீவிரவாதிகளால் சுட்டு கொல்ல பட்டது.
- நான் முன்பே சொன்னது போல், தீவிரவாதம் எங்கோ புகைந்து கொண்டு தான் இருக்கிறது. அவ்வப்போது தேசிய புலனாய்வு மையமும் ஏனைய பாதுகாப்பு மற்றும் உளவு துறைகளும் தகுந்த நடவடிக்கைகள் எடுத்து கொண்டு தான் உள்ளார்கள்.
- பொதுமக்கள் ஆகிய நாம், எவ்வாறு இதற்கு உதவலாம் என்றால்? சமூக வலை தளங்களில் தீவிரவாத மற்றும் தேச விரோத கருத்துகளை பதிவு செய்வோரை சட்டத்திற்கு முன் நிறுத்த நாம் உதவி செய்ய வேண்டும். அவர்களின் பதிவுகளை தேசிய புலனாய்வு முகாமைக்கு தெரிவிக்க வேண்டும். அதன் மூலம், நாம் எத்தனையோ பேரழிவுகளை தடுக்க முடியும்.
- அனைத்துயுமே, அரசாங்கம் தான் செய்ய வேண்டும் என நினைக்காமல், இது என் நாடு, இந்த நாட்டின் பாதுகாப்பு என் கடமை. இதற்கு குந்தகம் விளைவிப்போர் யாராக இருப்பினும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தகுந்த தண்டனை வாங்கி தருவது என் தலையாய கடமை என ஒவ்வொரு இந்தியனும் நினைக்க வேண்டும்.
- தீவிரவாத எதிர்ப்பு நாளான இன்று இதுவே நமது உறுதிமொழியாகவும் சூளுரையாகவும் இருக்க வேண்டும்.
Share it if you like it