சமூக ஆர்வலர், ஆசிரியர், என்னும் பன்முகத் தன்மை கொண்டவர் ரெனீ லின் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.
பிறப்பால் நான் அமெரிக்கன், உணர்வால் நான் இந்தியன். இந்தியா எனது வீடு அன்னை இந்தியாவைப் பாதுகாக்க தங்கள் உயிரைத் தியாகம் செய்த இந்தியாவின் உண்மையான ஹீரோக்களுக்கு மிகப் பெரிய வணக்கம் என்று அண்மையில் தெரிவித்து இருந்தார்.
சீனாவுக்கு எவ்வளவு தைரியம்! முதலில் உலகின் மிக மோசமான வைரஸ் இந்தியா வந்தது. இப்போது இந்தியாவின் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது புறக்கணிப்புக்கான நேரம். சீன தயாரிப்புகளை என் சகோதர, சகோதரிகள், குப்பை தொட்டியில் போட வேண்டும் என்று அவர் நாட்டு மக்களிடம் கேட்டு கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாழும் நாட்டிற்கு துளியும் விசுவாசம் இல்லாமல் இந்தியாவிற்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து வருபவர்கள் மத்தியில் அமெரிக்கர் ஒருவர் இந்திய ராணுவ வீரர்களின் இறப்பிற்கு நியாயம் கேட்கும் விதமாக தனது உணர்வினை வெளியிட்டு இருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.