நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு ஆதரவாகவும் எதிர்க்கட்சிகளின் தூண்டுதலின் பெயரிலும் அவ்வபொழுது சிலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில்.
மூர்ஷிதாபாத் தொகுதி காங்கிரஸ் கட்சி எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஷாஹேப்நகர் பகுதி மக்கள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். திடீரென திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அவர்கள் மீது வெடிகுண்டுகளை வீசி எறிந்தனர் என்று கூறியிருப்பது.
அம்மாநிலத்தை ஆளும் மம்தா பேனர்ஜிக்கு மிகுந்த ரத்த கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் தேர்தலில் எப்படியாவது கூட்டணி அமைத்து அங்கு அதிக தொகுதிகளை பெறலாம். என அவரின் பல செயல்களை கண்டும் காணாமலும், தங்களின் சர்க்கஸ் வித்தை காட்டி அவரிடம் நெங்கி வரும் இந்நிலையில்.
எம்.பியின் இந்த பேச்சு அக்கட்சியினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சி கூட்டும் அனைத்து கட்சி கூட்டத்திற்கு சில நேரங்களில் அவர் கலந்துக் கொள்ளாமல் ஒதுங்கி விடுவதும் வழக்கத்தில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே.