59 சீன செயலிகளுக்கு முற்றிலும் தடை, சீனாவில் இருந்து இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு கடும் வரிவிதிப்பு. சீன நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் இந்தியாவில் தொடர்ந்து ரத்து என்று அதிரடியான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
தென்சீனக் கடல் பகுதி தங்களுக்கு மட்டுமே உரிமையான பகுதி என்று சீனா அருகில் உள்ள சிறிய நாடுகளை தனது ராணுவ பலத்தின் மூலம் மிரட்டி வருகிறது. சர்வதேச சட்ட, திட்டங்களை, மதிக்காமல் தொடர்ந்து ஆணவ போக்குடன் இன்று வரை நடந்து வருகிறது.
தென்சீனக் கடல் பகுதி அனைத்து நாடுகளுக்கும் பொதுவானது. இதில் யாரும் உரிமை கொண்டாட முடியாது என்று இந்தியா அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் தனது ராணுவ கப்பலையும் தென் சீன கடல் பகுதிக்கு அணிப்பி இருப்பது. சீனா மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/FrontalAssault1/status/1283743781976633344