கருப்பட்டி என்னும் பனைவெல்லத்தின் மருத்துவ பயன்கள்..
சீனி நமக்கு எவ்வளவு பகையோ அதற்கு நேர் மாறாக கருப்பட்டி நம் நெருங்கிய நண்பன். பனங்கருப்பட்டியின் மருத்துவ பயன்கள் அளவில்லாதது.
இப்படி சர்க்கரை மற்றும் பல நோய்களின் தாக்கத்தில் இருந்து விடுபட நமக்கு கிடைத்த அருமருந்து தான் கருப்பட்டி. சர்க்கரைக்கு மாற்றாக கருப்பட்டியை பயன்படுத்தினாலே இன்று உள்ள பெரும்பாலான நோய்கள் இல்லாமலும் அதற்கான மருத்துவ செலவுகள் மற்றும் மருந்துகள் அவசியமில்லாமலே போகும்.
“உணவே மருந்து” என்னும் நியதிப்படி, கால சூழலுக்கு ஏற்றார் போல உடலுக்கு தேவையானதை தேவைப்படும் நேரத்தில் வழங்குகிறது கருப்பட்டி. உடல் இயக்கத்தை சீரான சமநிலைக்கும் கொண்டு வருகிறது.
பனங்கருப்பட்டியின் மருத்துவ பயன்கள்:
1.பனங்கருப்பட்டியில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
2.விட்டமின்-பி, மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ள கருப்பட்டி நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.
3.பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால் கருப்பை ஆரோக்கியமாக இருக்கும். நார்ச்சத்தும் இதில் அதிகம்.
4.குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித் தொல்லை நீங்கும்.
5.கருப்பட்டி மற்றும் பனங்கல்கண்டில் எண்ணற்ற விட்டமின்களும், மினரல் சத்துக்களும் உள்ளன.
6.கருப்பட்டி இயற்கையாகவே உடலை குளிர்ச்சியடையச் செய்யும். அதில் உள்ள ‘கிளைசீமி இன்டெக்ஸ்’ உடலில் கலக்கும் சர்க்கரை அளவை, வெள்ளை சர்க்கரையை விட பாதிக்கும் கீழாக குறைக்கிறது.
7.சர்க்கரைக்குப் பதிலாக கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது. மேலும் இதை சர்க்கரை நோயாளிகளும் குடிக்கலாம்.
8.கருப்பட்டி பணியாரம் குழந்தைகளுக்கு ஏற்றது. கருப்பட்டியை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்புகின்றனர்.
9.கருப்பட்டிஇரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு சுறுசுறுப்பை கொடுக்கும்.
10. மேனிபளபளப்பை பெறும்.
11.கருப்பட்டியில் சுண்ணாம்பு கலந்து சாப்பிட்டால் உடல் சுத்தமடையும்.
12.சீரகத்தை வறுத்து கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும்.
13.ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால் வாயு தொல்லை நீங்கும்.
14.கரும்பு சக்கரைக்கு பதிலாக கருப்பட்டியை பயன்படுத்தினால் பற்களும்எலும்புகளும் உறுதியாகும்
15. சக்கரை நோயாளிகள் கைகுத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டி கலந்து சாப்பிட்டு வந்தால் சக்கரையின் அளவு கட்டுபாட்டில் இருக்கும்.
16. பயணத்தின் போது நீரிழிவு நோயாளிகள் அடிக்கடி சிறுநீர் போவது குறையும்.
17.குழந்தைகள் முதல்பெரியவர்கள் வரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நம் உடலுக்கு தேவையான கால்சியம் கிடைக்கிறது.
18.சுக்குகருப்பட்டி பெண்களின் கர்ப்பபைக்கு மிகவும் ஏற்றது.
19.சுக்கு,மிளகு கலந்து கருப்பட்டியை குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால் பால் நன்றாக சுரக்கும்.
20.அந்த தாய் பாலை குடிக்கும் குழந்தைக்கு நல்ல ஊட்டசத்துக்கள் கிடைக்கபெறும்.