நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். வழக்கறிஞர் அருள்மொழிக்கு பெரியார் ஒளி விருதும், எஸ்றா சற்குணத்திற்கு காமராசர் கதிர் விருதும் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. இதன்மூலம், நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடாக இந்தியா மாறியுள்ளதால் இந்தியாவே மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர்.
பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருதா ?
கன்னடம், தமிழ், தெலுங்கு திரையுலகில் குணசித்திர நடிகராக இருப்பவர் பிரகாஷ்ராஜ். இவர் சமூக வலைதளங்களில் அடிக்கடி சர்ச்சை கருத்துகளை தெரிவித்து வருகிறார்.இந்த நிலையில் அவர் சந்திரயான்-3 திட்டம் பற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் சர்ச்சை கருத்தை பதிவிட்டுள்ளார். அதாவது பிரேக்கிங் நியூஸ் என்று பதிவிட்டு வாவ் விக்ரம் லேண்டர் நிலவில் இருந்து அனுப்பிய முதல் புகைப்படம் இது என்று குறிப்பிட்டு ஒருவர் டீ ஆற்றும் கார்ட்டூன் புகைப்படத்தை பகிர்ந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டது. இவ்வாறு நம் தேசத்தை அவமதித்தவருக்கா அம்பேத்கர் சுடர் விருதா ?
வழக்கறிஞர் அருள்மொழிக்கு பெரியார் ஒளி விருதா ? :
வழக்கறிஞர் அருள்மொழி எப்போதும் சனாதனத்திற்கு எதிராகவும் மோடி அரசுக்கு எதிராவுக்கும் தன் வக்கிரமான பேச்சால் வன்மத்தை பரப்பி கொண்டிருப்பவர்தான் இவர். காஷ்மீர் பிரிவு 370 வை நீக்கியதால் காஷ்மீரில் தொடர்ந்துகுண்டு சத்தம் கேட்டிருந்த நிலையில் தற்போது கார் பந்தயம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனை கூட விமர்சித்து வழக்கறிஞர் அருள்மொழி பேசினார்.
எஸ்றா சற்குணத்திற்கு காமராசர் கதிர் விருதா ?
மனிதர்களை பிடிப்பதுதான் எங்கள் வேலை, மதம் மாற்றுவதுதான் எங்கள் பணி என்று தி.மு.க.வின் தீவிர ஆதரவாளரும், கிறிஸ்தவ மதபோதகருமான எஸ்றா. சற்குணம் திமிராக பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். இவருக்கு காமராசர் கதிர் விருது.