சுதந்திர தினத்தை முன்னிட்டு அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முதல் முறையாக கொடியேற்றினார் .
கடந்த 2011 ஆம் ஆண்டு தான் முதன் முதலாக அண்ணா அறிவாலயத்தில் சுதந்திர தினம் அன்று தேசிய கொடி ஏற்றி
திமுகவினர் கொண்டாடினர். அன்று திமுகவின் இப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவனே தேசிய கொடியை
ஏற்றினார் .அப்போது உயிருடன் இருந்த திமுக தலைவர்கள் கருணாநிதியோ,அன்பழகனோ ,ஸ்டாலினோ கொடி ஏற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசின் தலைமை செயலகமான கோட்டையில் பலமுறை தேசியகொடியேற்றிய கருணாநிதி ,அறிவாலயத்தில் திமுக தலைவராக ஒரு ஆண்டும் கொடி ஏற்றியதில்லை. திமுக தலைவர் ஒருவர் சுதந்திர நாள் அன்று திமுகவின் தலைமை அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றியது இதுவே முதல் முறை.
தேசிய கொடியை ஏற்றிய ஸ்டாலின் அதன் பின் தேசிய கொடிக்கு மரியாதை செய்யாமல் அங்கிருந்து உடனே சென்றது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது
தேசிய கொடிக்கு மரியாதை கொடுக்காத திமுக தலைவர் என சமூக ஊடகங்களில் ஸ்டாலினை அனைவரும் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்
தேசிய கொடியை அவமதித்த ஸ்டாலின்@mkstalin @Udhaystalin @arivalayam pic.twitter.com/1avqRtHk1t
— கோகுல் गोकुल 🇮🇳 (@gokul_03_07) August 17, 2020